வினயா பிரசாத் (Vinaya Prasad) இவர் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகையாவார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் கன்னட திரைப்படத்தில் தனது நடிப்புத் தொழிலை தொடங்கினார். பின்னர் கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 60 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். இவர் தற்போது மலையாள மொழி படங்களில் நடித்துவருகிறார்.
வாழ்க்கை
வினயா பிரசாத் கர்நாடகாவில் உடுப்பியில் பிறந்து வளர்ந்தார். அவரது கணவர் ஜோதிபிரகாஷ், ஒரு தொலைக்காட்சி இயக்குனர் ஆவார்.
வெளி இணைப்புகள்
நடிகை வினயா பிரசாத் – விக்கிப்பீடியா