வினோதினி (Vinodhini) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு முன்பு முன்னணி மற்றும் துணை பாத்திரங்களில் நடித்தார். கன்னட படங்களில் ஸ்வேதா என்று அழைக்கபட்டார்.
தொழில்
வினோதினி குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மணல் கயிறு, புதிய சகாப்தம் மற்றும் மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். 1992 இல், பாலு மகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிதார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது. இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது மேலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. என்றாலும் இப்படம் வினோதினியின் திரைப்பட வாழ்க்கையை உயர்த்துவதில் தோல்வியுற்றது. அந்த ஆண்டு, இவர் மலையாள திரைப்படத்தில் சூர்யா மானசம் மற்றும் கன்னட திரையுலகில் சைத்ரதா பிரேமாஞ்சலி படங்களின் வழியாக அறிமுகமானார். அங்கு இவர் ஸ்வேதா என்ற பெயரில் அறிமுகமானார். இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. பிறகு பாலு மகேந்திராவின் மறுபடியும், விசுவின் பட்டுக்கோட்டை பெரியப்பா, ராம நாராயணன்னின் வாங்க பார்ட்னர் வாங்க, கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான, சூரியன் சந்திரன் மற்றும் முத்துக்குளிக்க வாரீயளா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களில் பெரும்பாலும் இரண்டாம் நிலை பாத்திரங்களிலேயே நடித்தார். 1990 களின் நடுப்பகுதியில் கன்னட படங்களில் தனது கவனத்தை செலுத்தினார், அங்கு இவர் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்தார். 90 களின் பிற்பகுதியில் மீண்டும் தமிழ் படங்களில் பணியாற்றிய இவர் சிறிய துணை வேடங்களிலும் கௌரவ வேடங்களிலுமே தோன்றினார். இவர் சிறிய பாத்திரத்தில் தோன்றிய படங்களில் பிரவீன் காந்தியின் அதிரடி திரைப்படமான ரட்சகன், சுந்தர் சி. இன் நகைச்சுவை படமான உனக்காக எல்லாம் உனக்காக, என். மாத்ருபூததின் புதிரா புனிதாமா ஆகியவை அடங்கும் .
வினோதினி விரைவில் தொலைக்காட்சி தொடர்களான சித்தி, அகல் விளக்கு மற்றும் கண்ணாடிக் கதவுகள், கிரேசி மோகனின் நகைச்சுவைத் தொடரான விடாது சிரிப்பு போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார் . தவிர, இவர் எட்டு ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தினார். 2005 ஆம் ஆண்டில் கஸ்தூரி மான் படத்தில் கதா நாயகியின் ( மீரா ஜாஸ்மின் ) சகோதரியாக துணை வேடத்தின் வழியாக தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வந்தார். அதன் விமர்சனத்தில், தி இந்து இந்த படத்தில் இவர் “மிகவும் கவரும் நடிப்பை” அளித்ததாக குறிப்பிடப்பட்டார். பின்னர், இவர் கரு பழனியப்பனின் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
1982 | மணல் கயிறு |
---|---|
1985 | புதிய சகாப்தம் |
1986 | மண்ணுக்குள் வைரம் |
1991 | சித்திரைப் பூக்கள் |
1991 | ஆத்தா உன் கோயிலிலே |
1991 | என் ஆசை ராசாத்தி |
1992 | வண்ண வண்ண பூக்கள் |
1992 | அபிராமி |
1992 | அன்னை வயல் |
1992 | கிழக்கு வீதி |
1992 | சூரிய மானசம் |
1992 | சிவலர் மைக்கலேல் |
1992 | சைத்ததா பிரேமாஞ்சலி |
1993 | மறுபடியும் |
1993 | சூரியன் சந்திரன் |
1993 | ஆத்மா |
1993 | கிஜ்ஜி நாடா |
1993 | பொன்னு சம்மி |
1994 | வாங்க பார்ட்னர் வாங்க |
1994 | என் ராஜாங்கம் |
1994 | சின்ன மேடம் |
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா |
1994 | நிஜன் கோட்டீஸ்வரன் |
1995 | கல்யாணம் |
1995 | இளவரசி |
1995 | முத்து குளிக்க வாரீயளா |
1995 | தொண்டன் |
1996 | வீட்டுக்குள்ளே திருவிழா |
1996 | அழகிய ராவணன் |
1996 | ஹெட்டவரு |
1996 | கற்பூர கொம்பே |
1996 | மிண்ணுகு தாரே |
1996 | முத்தின ஆலயா |
1997 | நோடு பா நம்மூரா |
1997 | பதுக்கு ஜாடக பண்டி |
1997 | லட்சுமி மகாலட்சுமி |
1997 | ரட்சகன் |
1997 | தடயம் |
1998 | அக்னி சக்தி |
1999 | உனக்காக எல்லாம் உனக்காக |
2000 | புதிரா புனிதமா |
2001 | கொட்டிகோபா |
2001 | நம்ம சம்சாரா ஆந்த்த சாகரா |
2004 | குடும்பா |
2005 | கஸ்தூரி மான் |
2008 | பிரிவோம் சந்திப்போம் |
2011 | சதுரங்கம் |
2017 | கொஞ்சம் கொஞ்சம் |
தொலைக்காட்சி
சித்தி |
---|
விடாது சிரிப்பு |
சிரி சிரி கிரேசி |
அக்னி நட்ச்சத்திரம் |
வெளி இணைப்புகள்
நடிகை வினோதினி – விக்கிப்பீடியா