நடிகை அபிராமி | Actress Abhirami

அபிராமி இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.


வாழ்க்கைக் குறிப்பு


இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பங்களிப்புகள்


வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

நடித்த திரைப்படங்கள்

2001 வானவில்
மிடில் கிளாஸ் மாதவன்
தோஸ்த்
சமுத்திரம்
சார்லி சாப்ளின்
2002 கார்மேகம்
சமஸ்தானம்
2004 விருமாண்டி
2015 36 வயதினிலே

வெளி இணைப்புகள்

நடிகை அபிராமி – விக்கிப்பீடியா

Actress Abhirami – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *