நடிகை படாபட் ஜெயலட்சுமி | Actress Fatafat Jayalaxmi

ஜெயலட்சுமி ரெட்டி அல்லது பரவலாக படாபட் ஜெயலட்சுமி (1958–1980) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் சுப்ரியா என்ற பெயரில் நடித்தார். தமிழில் அவள் ஒரு தொடர்கதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.


வாழ்க்கைக் குறிப்பு


தொடக்ககால வாழ்க்கை


ஜெயலட்சுமி, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் ஏற்ற “படாபட்” என்ற வேடம் பலராலும் அறியப்பட்டதால் “படாபட்” ஜெயலட்சுமி என்றவாறு அழைக்கப்படலானார்.


தனிப்பட்ட வாழ்க்கை


எம். ஜி. ராமச்சந்திரனது உறவினர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், 1980ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.


திரை வாழ்க்கை


1972 ஆவது ஆண்டில் அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளியான தீர்த்தயாத்ரா மலையாளத் திரைப்படத்தின் மூலமாக சுப்ரியா என்ற பெயரில் நடிகையாக அறிமுகமானார். 1973இல் இது மனுசுயனோ? என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தமிழில் கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் ஜெயலட்சுமி என்ற வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் படாபட் என்ற வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசினிகாந்த், கமல்ஹாசன், கிருஷ்ணா, என். டி. ராமாராவ், சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தவர்.

நடித்த திரைப்படங்கள்

1972 அர்த்தயாத்ரா
1973 இது மனுசுயனோ?
1974 அவள் ஒரு தொடர்கதை
1975 சொர்க்கம் நரகம்
1975 தேவார கண்ணு
1976 ஜோதி
1976 அந்துலேனி கதா
1976 அன்னக்கிளி
1977 அவர் எனக்கே சொந்தம்
1977 கவிக்குயில்
1978 வருவான் வடிவேலன்
முள்ளும் மலரும்
குங்குமம் கதை சொல்கிறது
1979 ஆறிலிருந்து அறுபது வரை
Korikale Gurralaite
1980 ஜதாரா
காளி
ஒந்து என்னு ஆறு கண்ணு
ராம் ராபர்ட் ரஹீம்
1981 நியாயம் காவாலி
திருகு லேனி மனுசி
1983 யாமிருக்க பயமேன்

வெளி இணைப்புகள்

நடிகை படாபட் ஜெயலட்சுமி – விக்கிப்பீடியா

Actress Fatafat Jayalaxmi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *