நடிகை காயத்ரி ஜெயராமன் | Actress Gayatri Jayaraman

காயத்ரி ஜெயராமன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம்.இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


பிறப்பும் வளர்ப்பும்


காயத்ரி ஜெயராம் என்று அறியப்படும் நடிகை, குல்பர்கா அருகில் சஹாபாத்தில் ஜெயராமன் -சித்ரா தம்பதியரின் மகளாய் 1984 செப்டம்பர் 27 இல் பிறந்தார் .இவரது குடும்பம் 1988 இல்சென்னைக்கு . குடிபெயர்ந்தது . இவரது கல்வி ஆதர்ஷ் வித்யாலயாவிலும் ,பின்னர் மும்பையில் உள்ள சர்ச் பார்க்கிலும் தொடர்ந்தது . இவருக்கு மருத்துவம் படிக்கவே முயன்றார் . இவர் போர்டு பரீட்சையில் தேறி 94 % மதிப்பெண் பெற்றும் வெறும் பி .எஸ்சி .தான் படிக்க முடிந்தது . இந்நிலையில் படிப்பும் , விளம்பர மாடலாகவும் இருந்து ,சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் பயின்றார் . என்றாலும் நடிகையின் வாழ்வு வெறும் நான்கு வருடம் என்றே புரிந்து பிசியோ தெராபியில் கவனம் செலுத்தினார் . நல்லி சில்க்ஸ் ,குமரன் சில்க்ஸ், போத்திஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் மாடலிங் செய்து கொண்டே 1997 அக்டோபர் மாதம் மிஸ்தமிழ்நாடு பட்டத்தையும், 1998 இல் மிஸ்தென்னிந்தியா பட்டத்தையும் வென்றார் . மிஸ் பெமினா இந்தியா 2000 போட்டியில் 8000 விண்ணப்பத்தில் 26 பேர் தெறிவு செய்யப்பட்டனர் . இவருக்கு நான்காவது இடம் கிடைத்தது .


சினிமா வாழ்வும் , சொந்த வாழ்க்கையும்


2001 இல் நீலா என்ற கன்னட படத்திலும் ,அசோகா என்ற இந்தி படத்தில் கரீனா கபூருடனும் ,மனதை திருடி விட்டாய் என்ற தமிழ் படத்திலும் நடித்தார் . நீலா வெற்றி வாகை சூடியது .மனதை திருடி விட்டாய் படத்தில் மஞ்சக் காட்டு மைனா பாட்டில் அவர் போட்ட ஆட்டமும், குலுங்கிய குலுக்கலும் காயத்ரிக்கு ரசிகர் வட்டத்தை சேர்த்து விட்டது. தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோது மலையாளத்துக்குத் தாவினார் காயத்ரி. பின்னர் சன் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் காம்பியராகவும் பணியாற்றிப் பார்த்தார் 2002 இல் வெளியான ஏப்ரல் மாதத்தில் முக்கிய வேடத்தில் தோன்றினார் . வசீகரா படத்திலும் தோன்றினார் .பின்னர் சின்னத்திரையிலும் நடித்தார் .


எல்லாம் முடிந்த பின்னர் அவர் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக மாறினார். சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக சில காலம் பணியாற்றினார்.பின்னர் அந்தமானில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக பணியாற்ற ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் சமீத்துக்கும், காயத்ரிக்கும் காதல் மூண்டது.இரண்டு வருடங்களாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2007 மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு இருவருக்கும் அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவில் சமித் சவ்ஹ்னி என்பாரை மணந்தார். அங்கு ஸ்கூபா டைவிங் பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறார் .

நடித்த திரைப்படங்கள்

2001 நீலா (திரைப்படம்)
அசோகா
மனதை திருடிவிட்டாய்
2002 Aaduthu Paaduthu
சிறீ
ஏப்ரல் மாதத்தில்
2003 வசீகரா
2004 நிஜன் சல்பேரு ராமன்குட்டி
2005 நாயுடு எல்எல்பி
2005 லோகநாதன் அய்.ஏ.எசு
சுவாமி

வெளி இணைப்புகள்

நடிகை காயத்ரி ஜெயராமன் – விக்கிப்பீடியா

Actress Gayatri Jayaraman – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *