நடிகை ஹன்சிகா மோட்வானி | Actress Hansika Motwani

ஹன்சிகா மோட்வானி (ஆங்கில மொழி: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.


சொந்த வாழ்க்கை


இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.


தொழில் வாழ்க்கை


ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.


ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.


பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ஆப் கா சரூர் – த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர் ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார், இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.


புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.


நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடித்த திரைப்படங்கள்

2003 எஸ்கேப் ஃப்ரம் தாலிபான்
2003 ஹவா
2003 கோயி…மில் கயா
2003 ஆப்ரா கா டாப்ரா
2004 ஜாகோ
2004 ஹம் கோன் ஹே
2007 தேசமுதுரு
2007 ஆப் கா சரூர்
2008 பிந்தாஸ்
2008 கந்திரி
2008 மனி ஹே தோ ஹனி ஹே
2009 மஸ்கா
2009 பில்லா
2009 ஜெயீபவா
2010 சீதாராமுல கல்யாணம்
2011 வேலாயுதம்
2011 மாப்பிள்ளை
2011 எங்கேயும் காதல்
2011 ஓ மை பிரண்ட்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி
2012 தேனிகைனா ரெடி
2013 சேட்டை
2013 வேட்டை மன்னன்
2013 சிங்கம் 2
2013 பிரியாணி
2013 தீயா வேலை செய்யணும் குமாரு
2014 மான் கராத்தே
2014 அரண்மனை
2015 ஆம்பள
2015 ரோமியோ ஜூலியட்
2015 வாலு
2015 அரண்மனை 2
2015 புலி
2015 இஞ்சி இடுப்பழகி
2015 சைஸ் சீரோ
2016 போக்கிரி ராஜா
2016 உயிரே உயிரே
2016 மனிதன்
2016 போகன்

தொலைக்காட்சி

2003 கியான்கி சாஸ் பி கபி பாகு தி
2003 தேஸ் மெய்ன் நிக்கிலா ஹோகா சந்த்
2003 கரிஷ்மா கா கரிஷ்மா
2003 ஷாகலகா பூம் பூம்
2004 ஹம் 2 ஹெயின் நா
2004 சிராஸ்

வெளி இணைப்புகள்

நடிகை ஹன்சிகா மோட்வானி – விக்கிப்பீடியா

Actress Hansika Motwani – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *