ஹீரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.
வாழ்க்கை
ஹீரா ராஜகோபால், நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் தெலுங்கிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. சஞ்சய் தத் நடித்த அமானத் இந்தி திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட்டில் அறிமுகமானார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் கமல், மம்மூட்டி, சிரஞ்சீவி, அஜித் குமார், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத், கார்த்திக், ரவி தேஜா, ரமேஷ் அரவிந்த், மற்றும் அனில் கபூர் போன்ற இந்திய முன்னணி திரைப்பட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1991 | இதயம் |
நீ பாதி நான் பாதி | |
1992 | பப்ளிக் ரவுடி |
என்றும் அன்புடன் | |
1993 | தசரதன் |
முன்னறிவிப்பு | |
பேண்டு மாஸ்டர் | |
சபாஷ் பாபு | |
திருடா திருடா | |
1994 | நம்ம அண்ணாச்சி |
தாட்பூட் தஞ்சாவூர் | |
தொங்கலா ராஜ்யம் | |
அமானத் | |
தி ஜெண்டில்மேன் | |
1995 | சதி லீலாவதி |
நிர்ணயம் | |
மின்னமினுகினும் மின்னுகெட்டு | |
ஒரு அபிபாஷகன்றே கேஸ் டயரி | |
1996 | லிட்டில் சோல்ஜர்ஸ் |
ஸ்ரீ காரம் | |
கிருஷ்ணா | |
காதல் கோட்டை | |
மிஸ்டர் பீச்சரா | |
ஔர் ஏக் பிரேம் கஹானி | |
அவ்வை சண்முகி | |
1997 | அஷ்வனம் |
கலாவிதா | |
செலிகாது | |
1998 | ஆவிட மா ஆவிடே |
அந்தப்புரம் | |
படுத தியாகா | |
யாரே நீனு செலுவே | |
யுவரத்ன ராணா | |
பூவேலி | |
சுந்தர பாண்டியன் | |
1999 | பெத்தமனுஷாலு |
தொடரும் | |
அல்லுடு காடு வச்சாரு | |
சுயம்வரம் (1999 திரைப்படம்) |