ஜோதி மீனா (Jyothi Meena) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்தார். இவர் உள்ளத்தை அள்ளித்தா அழகான நாட்கள் ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்தற்காகவும், குத்தாட்டப் பாடல்களில் ஆடியதற்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையில் ஜோதி மீனா பிறந்தார். இவர் நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஆவார். இவரது தந்தை ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவரது தாயார் இரத்த புற்றுநோயால் 2016 ஆகத்து 8 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
தொழில்
இவர் முதலில் சரத்குமாரின் படமான ரகசிய போலிஸ் படத்தில் நடித்தார். பின்னர் உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள், கோபாலா கோபாலா போன்ற படங்களிலில் குறிப்படத்தக்க துணை வேடங்களில் நடித்தார். மேலும் அஜித் குமார், பிரபு, சரத்குமார் ஆகியோருடன் குத்தாட்டப் பாடல்களில் ஆடினார். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 2017 அக்டோபரில், ஒரு நேர்காணலின் போது, நல்ல கதாபாத்திரம் வந்தால் தான் மீண்டும் நடிக்க வருவதாக கூறினார்.
நடித்த திரைப்படங்கள்
1995 | ரகசிய போலீஸ் |
---|---|
1995 | திருமூர்த்தி |
1995 | மாமன் மகள் |
1995 | மிஸ்டர். மெட்ராஸ் |
1995 | பரம்பரை |
1996 | உள்ளத்தை அள்ளித்தா |
1996 | கோபாலா கோபாலா |
1996 | பேமிலி |
1996 | நேதாஜி |
1996 | மாண்புமிகு மாணவன் |
1996 | புது நிலவு |
1997 | வாய்மையை வெல்லும் |
1997 | சிம்மதா மரி |
1997 | நல்ல மனசுக்காரன் |
1997 | நேசம் |
1997 | புதையல் |
2000 | பிரியம் |
2001 | அழகான நாட்கள் |
வெளி இணைப்புகள்
நடிகை ஜோதி மீனா – விக்கிப்பீடியா
Actress Jyothi Meena – Wikipedia