நடிகை ரவளி | Actress Ravali

ரவளி என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பிற மொழியில் சுபகன்சகலு, பெல்லி சண்டடி, வினோதம் மற்றும் மர்டு ஆகிய திரைப்படங்களில் நடித்தமையின் மூலம் அறியப்படுகிறார்.


திரைத்துறை


ரவளி தமிழில் பட்டத்து ராணி என்ற திரைப்படத்தின் மூலம் 1992 இல் அறிமுகமானார். இருப்பினும் விஜயகாந்த்தின் இணையாக திருமூர்த்தி என்ற படத்தில் நடித்த பின்பு தமிழின் கவனிக்கத்தக்க நடிகை ஆனார். அதன்பின்பு காந்தி பிறந்த மண், அபிமன்யு போன்ற பல படங்களில் நடித்தார். நாகலிங்கம் (திரைப்படம்) என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சம்பள பணம் தயாரிப்பாளரிடமிருந்து ரவளிக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக விஜயகாந்த் தலைமையில் இருந்த நடிகர் சங்கத்தினை அணுகி பெற்றுக்கொண்டார்.


தனிப்பட்ட வாழ்க்கை


ரவளி 9 மே 2007 இல் நீலி கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிதளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.


அரசியல்


ரவளி 02 மார்ச் 2009 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் சந்தித்து பேசிய பின்பு, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


நடித்த திரைப்படங்கள்

1990 ஜர்ஜ்மென்ட்
1991 ஜெயபாரி
1992 பட்டத்து ராணி (1992 திரைப்படம்)
மிஸ்டர் & மிசஸ்
1994 அலிபாபா அரடஜனு தொங்கலு
வாடு பாவா தப்பு
1995 ரியல் ஹீரோ
ஒரே ரிக்சா
திருமூர்த்தி (திரைப்படம்)
காந்தி பிறந்த மண்
1996 வினோதம்
பெல்லி சண்டடி
அக்கா பாகுன்னாவா
ராமூதோசாடு
பெல்லலா ராஜ்யம்
ராயூடுகாரு நாயூடுகாரு
சின்னப்பாயி
தேவராகம்
1997 பெரிய மனுஷன்
அபிமன்யு
புத்தம் புது பூவே
சின்னப்பாயி
குரால ராஜ்யம்
முடுல்ல மொகடு
பிரியமைன சிறிவரு
ராம்
சுபகன்சகலு
1998 மர்டு
கதிபிடி கிருஷ்ணா
வீரண்ணா
பிரதிஸ்டா
டாடி டாடி
1999 குபேரா
மறவாதே கண்மணியே
காலநாயகா
2000 கரிசக்காட்டு பூவே
நின்னே பிரேமிஸ்தா
பில்லா ரங்கா
நாகலிங்கம்
உன்னைக் கண் தேடுதே
2001 ஜெய்புனா நானா கதா
போர்ட் கொச்சி
பிரஜா
2002 படை வீட்டு அம்மன்
பாரதசிம்ஹா ரெட்டி
2003 அன்புத் தொல்லை
அமுலு
2004 சாந்தி சண்டீசம்’
எஸ்பி சிம்ஹா ஐபிஎஸ்
2005 வீரண்ணா
கீழு குர்ரம்
கௌதம் எஸ்எஸ்எல்சி
முல்ல கிரீதம்
மிஸ்டர் பக்ரா
2006 47ஏ பெசன்ட் நகர் வரை
அஸ்ட்ரம்
ஸ்டாலின்
டென்த் கிளாஸ்
பாஸ்
2007 சந்திரதாஸ்
2009 லைப் ஸ்டெயில்
2011 பில்லா தொரிகடதே பெல்லி
மாயகாடு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

நமோ வெங்கடேசா 2012
சுவாதி சின்னக்குலு 2013–தற்போது
சசிரேகா பரினயம் 2013-2016
சரவணா சமீரலு 2013-2016
அத்தரின்டிக்கி தாரேதி 2016-2018
வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்) 2018
பொண்ணுக்கு தங்க மனசு 2018
அபிலாசா 2019-2020

வெளி இணைப்புகள்

நடிகை ரவளி – விக்கிப்பீடியா

Actress Ravali – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *