நடிகை ரேகா | Actress Rekha

ரேகா என்று அழைக்கப்படும் ஜோஸ்பின் மே 18, 1970 என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்


இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார். இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை


இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

பெற்ற விருதுகள்


  • சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது – தசரதன் (1989)

  • தொலைக்காட்சி

    2006-2007 கனா காணும் காலங்கள்
    2019-2020 குக்கு வித் கோமாளி
    2020 பிக் பாஸ் தமிழ் 4

    தமிழ்த் திரைப்படங்கள்

    1986 கடலோரக் கவிதைகள்
    1986 புன்னகை மன்னன்
    1987 செண்பகமே செண்பகமே
    1987 உள்ளம் கவர்ந்த கள்வன்
    1987 கதாநாயகன்
    1988 என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
    1988 மேகம் கருத்திருக்கு
    1988 காவலன் அவன் கோவலன்
    1988 எங்க ஊரு பாட்டுக்காரன்
    1988 ராசாவே உன்னை நம்பி
    1988 காலையும் நீயே மாலையும் நீயே
    1989 பாட்டுக்கு நான் அடிமை
    1989 வரவு நல்ல உறவு
    1989 நினைவே ஒரு சங்கீதம்
    1989 தம்பி தங்கக் கம்பி
    1989 பிள்ளைகாக
    1987 வேடிக்கை என் வாடிக்கை
    1990 மூடு மந்திரம்
    1990 புரியாத புதிர்
    1990 என் காதல் கண்மனி
    1991 குணா
    1991 இரும்பு பூக்கள்
    1991 வைதேகி கல்யாணம்
    1992 இதுதாண்டா சட்டம்
    1992 அண்ணாமலை
    1992 டேவிட் அங்கிள்
    1992 திருமதி பழனிச்சாமி
    1996 காலம் மாறிப்போச்சு
    2002 ரோஜா கூட்டம்
    2003 கோவில்
    2003 வில்லன்
    2008 தசாவதாரம்
    2010 உத்தம புத்திரன்
    2013 யா யா
    2013 தலைவா

    தெலுங்குத் திரைப்படங்கள்

    2012 மணி மணி மோர் மணி

    வெளி இணைப்புகள்

    நடிகை ரேகா – விக்கிப்பீடியா

    Actress Rekha – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *