நடிகை ஷாமிலி | Actress Shamili

பேபி ஷாமிலி என்றும் அறியப்படும் ஷாமிலி (Shamili) மலையாள, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகை.. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் 1990 இல் வெளிவந்த திரைப்படமான அஞ்சலியில் நடித்திருந்தார். அவரது சிறப்பான நடிப்புகாக பாராட்டு பெற்றார். மேலும் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியத் திரைப்பட விருது கிடைத்து. மல்லூடி என்னும் மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தையாக நடித்ததற்கு சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதைப் பெற்றார் .


ஆரம்ப வாழ்க்கை


இவர் ஒரு நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவராவார். இவர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை ஷாலினி ஆகியோரின் தங்கையாவார். இவர் பாபு மற்றும் ஆலிஸ் இணையருக்குப் பிறந்தவராவார். அவரது தந்தை பாபு திரைப்படங்களில் நடிக்கும் நோக்கத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தவராவார். பின்னர் அவர் தனது பிள்ளைகள் மூலம் தனது இலட்சியம் நிறைவேற்றிக்கொண்டார்.


தொழில்


இரண்டு வயதில் ஷாமிலி தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தின் வழியாக மிகப்புகழ் பெற்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்படத்தில் அவர் ஒரு மனவளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தையாக நடித்தார். இது அவருக்கு சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.


ஓய்! (2009) என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து கதாநாயகியாக முதல் முறை நடித்தார். 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஷாமிலி சிங்கப்பூரில் படித்து வேலை செய்தார். தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வீர சிவாஜி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

வெளி இணைப்புகள்

நடிகை ஷாமிலி – விக்கிப்பீடியா

Actress Shamili – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *