நடிகை ஸ்ருதி ராஜ் | Actress Shruthi Raj

ஸ்ருதி ராஜ் என்பவர் தென் இந்தியா மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு மாணவன் (1996), இனி எல்லாம் சுகமே (1998), காதல்.காம் (2004), ஜெர்ரி (2005) போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தென்றல் (2009-2015), ஆபீஸ் (2013-2015), அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் (2015-2016) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.


தொழில்


திரைப்படத் துறை


இவர் 1995ஆம் ஆண்டு வெளியான அக்ராஜன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஜான்சி என்ற துணைக்கதாபாத்திரம் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தமிழ் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது இவரின் முதல் தமிழ் மொழித் திரைப்படமாகும். 1998ஆம் ஆண்டு நடிகர் அப்பாஸ் மற்றும் சங்கவி நடித்த இனி எல்லாம் சுகமே என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நிர்மலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே ஆண்டில் அந்தமான் என்ற கன்னடமொழித் திரைப்படத்தில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக மோனிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கன்னடத்திரைப்படத் துறையில் அறிமுகமானார். முன்னாள் மலையாளத்து திரைப்பட நகைச்சுவை நடிகையான ஸ்ரீலதா மூலம் இயக்குனர் ஜி.ஜோர்ஜ் இயக்கிய மம்மூட்டி மற்றும் குஷ்பூ இணைத்து நடித்த எலவம்கோடு தேசம் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு இளம் பெண்ணான நந்தினி என்ற கதாபத்திரத்தில் நடித்தார்.


இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தது 1999ஆம் ஆண்டு இவரது அடுத்த மலையாளத்திரைப்படமான உதயபுரம் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடிகர் திலீப் மற்றும் பிரீத்தா விஜயகுமாருடன் இணைத்து நடித்துள்ளார். 2000ஆம் ஆண்டு இவரது அடுத்த திரைப்படமான இயக்குனர் சணல் இயக்கிய பிரியம் என்ற திரைபபடத்திலும், வருவாயா மற்றும் தோஸ்த் (2001) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


2001ஆம் ஆண்டு விதேக்கடி மொகுடண்டி என்ற தெலுங்கு மொழித் திரைப்படத்தில் சுருதி என்ற காதாபாத்திரம் மூலம் தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமானார் அதை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ஓ சைனதானா என்ற திரைபபடத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துடன் ஜோடியாக திவ்யா என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து வார் அண்ட் லவ் (2003), காதல்.காம் (2004), மந்திரன் (2005), ஜெர்ரி (2005) மற்றும் இயக்கம் (2008) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


சின்னத்திரை


இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதே அலைவரிசையில் கோலங்கள் தொடர் ஒளிபரப்பான நேரத்தில் தென்றல் என்ற தொடரில் துளசி என்ற முதன்மை காதாபாத்திரத்தில் நடித்தார். அவருடன் சேர்ந்து தீபக் டிங்கர், ஹேமலதா, சுபாலேகா சுதாகர், நீலிமா ராணி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இந்த தொடர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த தொடரில் நடித்ததற்காக 2012ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் வழங்கிய சிறந்த ஜோடிகள் விருதும் மற்றும் 2014ஆம் ஆண்டு வழங்கிய சிறந்த நடிகை, தேவதைகள் விருது மற்றும் சிறந்த ஜோடி போன்ற விருதுகளை வென்றார். இந்த தொடரின் மூலம் இவர் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஆனார். இந்த தொடரின் தெலுங்கு பதிப்பில் இவரே கதாநாயகியாக நடித்தார் இந்த தொடர் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் தமிழில் வெற்றி பெற்ற அளவு தெலுங்கில் வெற்றிபெறமுடியவில்லை இதனால் இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இது கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மறு தயாரிப்பு செய்து ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.


2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பணி மற்றும் காதல் சார்ந்த தொடரான ஆபீஸ் என்ற தொடரில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த தொடரின் 2ஆம் பாகம் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் (2015-2016) என்ற தொடரில் கௌரி என்ற காதாபாத்திரத்திலும் அபூர்வ ராகங்கள் (2015-2018) என்ற தொடரில் பவித்ரா என்ற காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


2018ஆம் ஆண்டு முதல் அழகு என்ற தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


தொடர்கள்

2009–2015 தென்றல்
2011–2012 ஷ்ரவானி சுப்பிரமண்யா
2013–2015 ஆபீஸ்
2015–2016 அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
2015–2018 அபூர்வ ராகங்கள்
2018 அழகு

வெளி இணைப்புகள்

நடிகை ஸ்ருதி ராஜ் – விக்கிப்பீடியா

Actress Shruthi Raj – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *