நடிகை ஸ்ரீஜா ரவி | Actress Sreeja Ravi

ஸ்ரீஜா ரவி (Sreeja Ravi) ஒரு இந்திய குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார், அவர் மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் பேசியுள்ளார், மேலும் பல வர்த்தக விளம்பரங்களுக்காக ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், ஜி அரவிந்தன் இயக்கிய, உத்தராயணத்தில் தனது குரல்-ஒலிச்சேர்க்கை வாழ்க்கையைத் தொடங்கினார்.


இவர், ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு, பெங்காலி , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பேசும் திறன் பெற்றவர். அதனால் ஆறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு குரல் ஒளிச்சேர்க்கை செய்துள்ளார்.


இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில், கர்ப்பமாக இருக்கும் இவரிடம், நடிகை தபு, வீட்டைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இவர், சிம்ரன் , ஜோதிகா , அனுஷ்கா ஷெட்டி போன்ற பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். சிறந்த குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை ஸ்ரீஜா நான்கு முறை பெற்றுள்ளார். இவரது மகளான ரவீனா ரவி , தற்போது வளர்ந்து வரும் ஒரு குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராவார்.


சொந்த வாழ்க்கை


இவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். 1972 ம் ஆண்டு இவரது தந்தையின் மரணத்திற்கு பிறகு குடும்பம் சென்னைக்குச் சென்றனர். இவரது தாயார் ஒரு ஒலிச்சேர்க்கை கலைஞராக பணிபுரிந்தார் மற்றும் சில திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். ஸ்ரீஜா தனது தாயுடன் ஸ்டூடியோவுக்குச் சென்று, இறுதியில் குரல்-ஒலிச்சேர்க்கை செய்யத் தொடங்கினார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேராவர். அவற்றில் இரண்டு பேர்கள் தற்போது உயிருடன் இல்லை. மனோமோகன், மதன்மோகன், ஸ்ரீதரன், பிரகாஷ்பாபு, ரசிக்லால், ஜோதிஷ் குமார், டாக்டர் விஜயலட்சுமி ராஜன் சிங் மற்றும் பிரேமசுதா கிருஷ்ணன்குட்டி ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள் ஆவார்கள்.[சான்று தேவை]


இவர், ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியரின் ஒரே மகளான ரவீனா ரவி , தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராகப் பணிபுரிகிறார்.

வெளி இணைப்புகள்

நடிகை ஸ்ரீஜா ரவி – விக்கிப்பீடியா

Actress Sreeja Ravi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *