நடிகை ஸ்ரீதேவி | Actress Sridevi

ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 – 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.


கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படம் மம் 300வது படமாகும்.


கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.


குடும்பம்


ஸ்ரீதேவி, அய்யப்பன் – இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி, 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.


பாலிவுட்


ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.


மறைவு


2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது. பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது. உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


நடித்த திரைப்படங்கள்

1969 துணைவன்
1969 நம் நாடு
1970 அகத்தியர்
1970 பெண் தெய்வம்
1971 பாபு
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன்
1972 கனிமுத்து பாப்பா
1972 மலைநாட்டு மங்கை
1972 வசந்த அறைகள்
1973 நண்பன்
1973 தெய்வ குழந்தைகள்
1973 பிரார்த்தனை
1973 பாரத விலாஸ்
1974 திருமாங்கல்யம்
1974 திருடி
1974 எங்கள் குல தெய்வம்
1974 அவளுக்கு நிகர் வேல்
1976 தசாவதாரம்
1976 மூன்று முடிச்சு
1977 உன்னை சுற்றும் உலகம்
1977 காயத்ரி
1977 கவிக்குயில்
1977 16 வயதினிலே
1977 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
1978 இளைய ராணி ராஜலட்சுமி
1978 யமுனா கங்கா காவேரி
1978 டாக்ஸி டிரைவர்
1978 வணக்கத்திற்குரிய காதலியே
1978 இது எப்புடி இருக்கு
1978 மச்சானைப் பார்த்தீங்களா
1978 மனிதரில் இத்தனை நிறங்களா
1978 முடிசூடா மன்னன்
1978 பைலட் பிரேம்நாத்
1978 சிகப்பு ரோஜாக்கள்
1978 ஆண்கள்
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை
1978 ராஜாவுக்கேத்த ராணி
1978 சக்கபோடு போடு ராஜா
1979 அரும்புகள்
1979 தர்ம யுத்தம்
1979 கல்யாணராமன்
1979 பகலில் ஒரு இரவு
1979 கவரிமான்
1979 நீலமலர்கள்
1979 நான் ஒரு கை பார்க்கிறேன்’ ‘
1979 பட்டாக்கத்தி பைரவி
1979 சிகப்புக்கல் மூக்குத்தி
1979 லட்சுமி
1979 தாயில்லாமல் நானில்லை
1980 குரு
1980 ஜானி
1980 வறுமையின் நிறம் சிவப்பு
1980 விஸ்வரூபம்
1981 பால நாகம்மா
1981 தெய்வ திருமணங்கள்
1981 சங்கர்லால்
1981 மீண்டும் கோகிலா
1981 ராணுவ வீரன்
1982 மூன்றாம் பிறை
1982 தேவியின் திருவிளையாடல்
1982 தனிக்காட்டு ராஜா
1982 போக்கிரி ராஜா
1982 வாழ்வே மாயம்
1982 வஞ்சம்
1983 அடுத்த வாரிசு
1983 சந்திப்பு
1985 மீனாட்சியின் திருவிளையாடல்
1986 நான் அடிமை இல்லை
1986 ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ்
2015 புலி

வெளி இணைப்புகள்

நடிகை ஸ்ரீதேவி – விக்கிப்பீடியா

Actress Sridevi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *