ஸ்ரீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.
18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
நடித்த திரைப்படங்கள்
1992 | ரிக்சா மாமா |
---|---|
அம்மா வந்தாச்சு | |
டேவிட் அங்கிள் | |
தெய்வ குழந்தை | |
சுகமான சுமைகள் | |
1997 | ருக்மணி |
2002 | ஈஸ்வர் |
காதல் வைரஸ் | |
2003 | பிரியமான தோழி |
தித்திக்குதே | |
நின்னே இஸ்டப்பட்டேனு | |
2004 | தேவதையைக் கண்டேன் |
2005 | நிரக்சனா |
கஞ்சரங்கா | |
2006 | ஆதி லட்சுமி |
2007 | Preethigaagi |
2008 | Pellikani Prasad |
2009 | மஞ்சீரா |
2011 | வீரா |
செல் போன் 2013 |
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் – விக்கிப்பீடியா
Actress Sridevi Vijaykumar – Wikipedia