நடிகை ஸ்ரீ திவ்யா | Actress Sri Divya

ஸ்ரீதிவ்யா (SriDivya) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.


தொழில்


ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.


பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.. பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

2000 ஹனுமான் ஜங்ஷன்
2000 யுவராஜு
2003 வீடே
2010 மனசார
2012 பஸ் ஸ்டாப்
2013 மல்லெல தீரம் லோ சிரிமல்லெ புவ்வு
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம்
2014 ஜீவா
2014 வெள்ளைக்கார துரை
2015 காக்கி சட்டை
2015 பென்சில்
2015 ஏத்தி
2016 மருது

வெளி இணைப்புகள்

நடிகை ஸ்ரீ திவ்யா – விக்கிப்பீடியா

Actress Sri Divya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *