நடிகை ஸ்ரீரஞ்சனி | Actress Sriranjani

ஸ்ரீரஞ்சனி (Sriranjani 22 பெப்ரவரி 1927 – 27 ஏப்ரல் 1974) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகையாவார். இவர் ஸ்ரீரஞ்சனி (சீனியர்) என்பவரின் தங்கை. அதனால் இவர் ஸ்ரீரஞ்சனி (ஜூனியர்) என அழைக்கப்பட்டார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் துன்பத்தில் உழலும் மனைவி பாத்திரங்களில் நடித்தார்.


முன் வாழ்க்கை


ஸ்ரீரஞ்சனி பிறந்தது ஆந்திரப்பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள முருக்கிபுடி கிராமமாகும். இவரது அக்கா மூத்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு நடிகையாவார். இவர் முதலில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். இவரது இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தன் அக்காவுடன் வளர்ந்து, திரைத்துறையில் நடிக்க விரும்பினார். சித்திரப்பு நாராயணமூர்த்தி இவருக்கு நடிக்கும் வாய்ப்பை பீஷ்மா (1944) படத்தில் அளித்தார். பின்னர் கொல்லபாமா, பிரம்மாச்சாரி, கீதாஞ்சலி, மதலாசா, லைலா மஜ்னு போன்ற படங்களில் நடித்தார். இவர் வாழ்வின் திருப்பு முனையான பாத்திர வாய்ப்பாக குணசுந்தரி கதா ( 1949 ) என்ற படம் புகழ்பெற்ற இயக்குநரான கத்ரி வெங்கட ரெட்டி இயக்கிய படத்தில் கிடைத்தது. இவர் நடித்த குண சுந்தரி பாத்திரம் திரைத்துறையில் இவருக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. தெலுங்கு படமான குணசுந்தரி கதா படத்தை தமிழில் எடுத்தபோது குண சுந்தரி வேடத்தில் தமிழிலும் ஸ்ரீரஞ்சனியே நடித்து பாராட்டைப் பெற்றார். இதன் பிறகு தலைசிறந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கத் துவங்கியது. மன்றதண்டம், சங்கராந்தி, பிரேமா, ப்ரதுகு தெருவு, சுவயம்ப்ரபா, ராமாஞ்சநேய யுத்தம் போன்ற பல படங்களில் நடித்தார். என்றாலும் இவரின் குணசுந்தரி கதா பட நடிப்பு எப்போதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.


இவர் நடித்த தமிழ்ப் படமான பராசக்தி (1952), இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. அதே ஆண்டு அவர் எம்.ஜி.ஆருடன் குமாரி என்ற படத்தில் நடித்தார். ரத்தக்கண்ணீர் படத்தில் தொழுநோய் பிடித்த (1954) நாயகனாக நடித்த எம்.ஆர்.ராதாவுக்கு இணையாக நடித்தார். ராஜி என் கண்மணி (1954) படத்தில் ராஜி என்னும் பார்வையற்ற பூக்காரி பாத்திரைத்தை ஏற்று நடித்தார். இந்தப்படம் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்சு (1931) படத்தின் தழுவல் ஆகும்.


1960 ஆம் ஆண்டு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் வயதான தாயார், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 1974 ஆம் ஆண்டு காலமானார்.


நடித்த படங்கள்


 • இண்டி கோடலு (1974)

 • ஜீவன தரங்காலு (1973)

 • பலே தம்முடு (1969)

 • நேனன்டே நேனே (1968)

 • பங்காரு பஞ்சாரம் (1965)

 • ஸ்ரீ கிருஷ்ணார்ஜுண யுத்தம் (1963)

 • மஹாகவி காளிதாசு (தெலுங்கு, 1960)

 • கிருஷ்ண லீலலு (1959)

 • பிரேமே தெய்வம் (1957)

 • பெங்கி பெல்லாம் (1956)

 • உமா சுந்தரி (1956)

 • சந்தானம் (1955)

 • ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் (1955)

 • ரத்தக்கண்ணீர் (1954)

 • சந்த்ரஹாரம் (1954)

 • அமரசந்தேசம் (1954)

 • பேதமனசுலு (1954)

 • ராஜி என் கண்மணி (1954)

 • இல்லற ஜோதி (1956)

 • திலகம் (1960)

 • ஒரே வழி

 • ப்ரதுகு தெருவு (1953)

 • காதல் (1952)

 • மணவாட்டி (1952)

 • பராசக்தி (1952)பெண்குலத்தின் பொன் விளக்கு

 • பிரேமா (1952)

 • ராஜேஸ்வரி (1952)

 • குமாரி (1952)

 • சங்ராந்தி (1952)

 • மந்த்ரதண்டம் (1951)

 • வாலி சுக்ரீவா (1950)

 • அன்பே தெய்வம் (1956)

 • லைலா மஜ்னு (1949)

 • குணசுந்தரி கதா (1949)

 • கீதாஞ்சலி (1948)

 • மதலசா (1948)

 • பெண்குலத்தின் பொன் விளக்கு (1949)

 • ப்ரேம ரதம் (1947)

 • கிரகப்பிரவேசம் (1946)

 • பீஷ்மா (1944)

 • வெளி இணைப்புகள்

  நடிகை ஸ்ரீரஞ்சனி – விக்கிப்பீடியா

  Actress Sriranjani – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *