வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman, பிறப்பு: 4 நவம்பர் 1991) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார். அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார். தற்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகிறார். பல படங்களில் சிரிப்பு நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2012 | நீ தானே என் பொன்வசந்தம் |
---|---|
2012 | எட்டோ வெளிபொயிந்தி மனசு |
2013 | தீயா வேலை செய்யனும் குமாரு |
2013 | சம்திங் சம்திங் |
2013 | ராமய்யா வச்தாவையா |
2014 | மாலினி 22 பாளையங்கோட்டை |
2014 | மாலினி 22 விஜயவாடா |
2014 | வீரம் |
2014 | ஜில்லா |
வெளி இணைப்புகள்
நடிகை வித்யுலேகா ராமன் – விக்கிப்பீடியா
Actress Vidyullekha Raman – Wikipedia