நடிகை விஜி | Actress Viji

விஜி (Viji) தமிழ் படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தனது முதல் படத்தில் அறிமுகமாகி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


சுயசரிதை


கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் “கோழி கூவுது” விஜி என அழைக்கப்பட்டார்.


பூவே உனக்காக படப்பிடிப்பின் போது இவருக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டது 1996இல் இவருக்கு முள்ளந்தண்டு வட அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, விஜி தற்காலிக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனைகளுக்கு எதிராக ஒரு வழக்கை அவர் தாக்கல் செய்தார் , மருத்துவமனை நிர்வாகம் இவருக்கு ரூ .30,000த்தை திரும்ப வழங்கியது. விஜி ஒரு சரியான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார் 2000 இல் மீண்டும் சிம்மாசனம் என்றத் திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். விஜியை பல படங்களில் நடிக்க வைத்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த்தார், மேலும் தனது அடுத்த படமான வாஞ்சிநாதன் படத்தில் அவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தார், ஆனால் “சிம்மாசனம்” இறுதியில் அவரது கடைசி படமானது.


2000 நவம்பர் 27 அன்று சென்னையில் தனது வீட்டிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமென ஏற்கனவே திருமணம் செய்து கொண்டஇயக்குநர் ஏ.ஆர். ரமேஷ் என்பவரை குற்றம் சாட்டினர். ரமேஷ் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் பின்னர் மறுத்துவிட்டார் மற்றும் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரமேஷ் விஜியை ஒரு விழாவில் சந்தித்தார் என தி இந்து நாளிதழ் எழுதியது. ரமேஷ், அவரது மனைவி ஏ. ஆர். சுமதி மற்றும் அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் விஜியின் தற்கொலையை தூண்டியதாக காரணம் காட்டி மகிலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வெளி இணைப்புகள்

நடிகை விஜி – விக்கிப்பீடியா

Actress Viji – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *