பிந்து பணிக்கர் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 140 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். வாத்சல்யம், சூத்ரதரன், ஜோக்கர் ஆகியவை இவர் நடித்த முக்கிய திரைப்படங்களாகும். பிந்து சிறந்த துணை நடிகைக்கான நான்காவது லக்ஸ்-ஏசியானெட் விருது வென்றவர். பிந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பிந்து முதன்முதலில் பிஜு நாயரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு கல்யாணி என்ற மகள் பிறந்தாள். பிஜு நாயர் இறந்த பின்னர் நடிகர் சாய் குமாரை 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.
விருதுகள்
தொலைக்காட்சி
வெளி இணைப்புகள்
நடிகை பிந்து பணிக்கர் – விக்கிப்பீடியா