நடிகை சிப்பி | Actress Chippy

சிப்பி (Chippy ) ( கன்னடத் திரையுலகில் ஷில்பா என அறியப்படுகிறார்) இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் பணிபுரிகிறார். மேலும் முதன்மையாக மலையாளம் மற்றும் கன்னப்ட படங்களில் பணியாற்றுகிறார். ஜானுமதா ஜோடி (1996) என்றத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – கன்னடம் மற்றும் கர்நாடக மாநில சிறந்த திரைப்பட விருதை வென்றார் . பூமி தாயா சோச்சலா மாகா (1998), முங்கரினா மிஞ்சு (1997) மற்றும் இது என்தா பிரேமவய்யா (1999) போன்ற வெற்றி பெற்ற பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகில் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக ஷில்பா மற்றும் ரமேஷ் அரவிந்த் ஜோடி கருதப்படுகிறது. இவர் ஸ்த்ரீஜன்மம், ஸ்த்ரீ ஓரு சந்தாவனம், ஆகாஷதூத்து உள்ளிட்ட பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.


தொழில்


சிப்பி 1993ஆம் ஆண்டில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த பரதன் இயக்கிய பதேயம் மூலம் திரைப்பட அறிமுகமானார். இவர் பல மலையாளப் படங்களில் துணை வேடங்களிலும், சில முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் இவர் 1996இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கன்னடப் படமான ஜானுமதா ஜோடி என்ற படத்தில் நடித்தார். இது கன்னட திரையுலகில் பல சாதனைகளை முறியடித்து ஐநூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. கன்னடத் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவர் இந்தப் படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசிடமிருந்து சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.


தொலைக்காட்சி


திருமணத்திற்குப் பிறகு இவர் தனது கவனத்தை மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு மாற்றினார். ஸ்த்ரீஜனத்தில் மாயம்மா என்ற பாத்திரத்தில் இவர் நன்கு அறியப்பட்டார். பின்னர் இவரது தயாரிப்பின் (அவந்திகா கிரியேசன்) கீழ் பல தொடர்களில் நடித்தார். பல்வேறு பிரபலமான மலையாள நாடகத் தொடர்களில் நடித்ததற்காக இவர் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். மேலும் மலையாளத் தொலைக்காட்சித் தொடர் துறையில் சிறந்த பெண் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இப்போது இவர் வானம்பாடி மற்றும் மௌன ராகம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.


தனிப்பட்ட வாழ்க்கை


கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஷாஜி மற்றும் தங்கம் ஆகியோருக்கு சிப்பி பிறந்தார். சிப்பிக்கு திரிஷ்யா என்ற சகோதரி உள்ளார். தயாரிப்பாளர் எம்.இரஞ்சித்தை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.

வெளி இணைப்புகள்

நடிகை சிப்பி – விக்கிப்பீடியா

Actress Chippy – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *