கிரேசி சிங் (Gracy Singh) (பிறப்பு சூலை 20, 1980) ஒரு இந்திய நடிகை. இவர் லகான் இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் அறியப்படுகிறார். மேலும், இவர் பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்.
தொழில்
தில்லியில் பிறந்த சிங், “த பிளானட்ஸ்” என்கிற நடனக் குழு மூலமாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் முதலில் ‘அமனத்’ என்கிற தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். பின்னர் ஆமிர் கான் நடித்துள்ள ஆஷுடொஷ் கோவாரிகரின் லகான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். இப் படத்தின் சிறந்த அறிமுக நடிகையாக பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான திரை விருதினைப் பெற்றுள்ளார்.
‘லகான்’ படத்தைத் தொடர்ந்து சில இந்தி (முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.; உள்பட) மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் [(சந்தோஷம் (2002)] நடித்துள்ளார். மேலும், பஞ்சாபி மொழியில் “லாக் பரதேசி ஹோயி” படத்திலும், ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான “லவுட் ஸ்பீக்கர்” என்கிற மலையாள மொழிப் படத்திலும் நடித்துள்ளார்.
2015இல் மீண்டும் தொலைக்காட்சித் தொடரான “சந்தோஷி மாதா”வில் நடித்துள்ளார்.
விருதுகள்
இவர் 2002இல்லகான் திரைப்படத்தில் நடித்ததற்காக, ஐ ஐ எஃப் ஏ வின் சிறந்த அறிமுக நடிகை விருது, அறிமுக நடிகைக்கான திரை விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ திரைப்பட விருதுகளைப் பெற்றார். மேலும், இந்தியில் ‘லகான்’ மற்றும் தெலுங்கில் ‘சந்தோஷம்’ திரைப்படங்களில் நடித்ததற்காக 2002இல் பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.