நடிகை கல்பனா | Actress Kalpana

கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 – சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.


இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983இல் முதன்முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.


2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.


குடும்ப வாழ்க்கை


திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

தனிச்சல்ல ஞான் 2012
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ. 2012
இந்தியன் ரு 2011
சீனியர் மாண்ட்ரெக் 2010
டுவன்டி20 2008
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் 2007
கிருத்யம் 2005
அற்புதத்தீவு 2005
பங்களாவில் ஔதா 2005
பைவ் பிங்கர்ஸ்‌ 2005
இதயத் திருடன் (தமிழ்) 2005
மாம்பழக்காலம் 2004
விஸ்மயத்தும்பத்து 2004
தாளமேளம் 2004
வரும் வருன்னு வன்னு 2003
மிழி ரண்டிலும் 2003
மேல்விலாசம் சரியாணு 2003
வெள்ளித்திரை 2003
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்) 2002
சிரிக்குடுக்க 2002
காக்கே காக்கே கூடெவிடெ 2002
கண்ணகி 2002
காசில்லாதெயும் ஜீவிக்காம் 2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா 2002
ஊமைப்பெண்ணின்‌ உரியாடாப்பய்யன் 2002
இஷ்டம் 2001
டும் டும் டும் (தமிழ்) 2001
அமேரிக்கன் அம்மாயி 1999
சந்தாமாமா 1999
சார்ளி சாப்லின் 1999
சுவஸ்தம் கிருஹபரணம் 1999
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும் 1998
கிராம பஞ்சாயத்து 1998
ஜூனியர் மான்ட்ரேக் 1997
கல்யாண உண்ணிகள் 1997
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம் 1997
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன் 1997
நியூஸ்பேப்பர் பாய்‌ 1997
உல்லாசப்பூங்காற்று 1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா 1996
காதில் ஒரு கின்னாரம் 1996
களிவீடு 1996
குடும்பக்கோடதி 1996
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு 1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை 1995
களமசேரியில் கல்யாண யோகம் 1995
பை பிரதர்ஸ் 1995
புன்னாரம் 1995
சதிலீலாவதி 1995
திரீமென் ஆர்மி 1995
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]] 1994
குடும்பவிசேஷம் 1994
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு 1994
பூச்சய்க்காரு மணி கேட்டும் 1994
பட்டர்பிளைஸ் 1993
காந்தர்வம் 1993
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ் 1993
காபூளிவாலா 1993
காவடியாட்டம் 1993
பொன்னுச்சாமி 1993
உப்புகண்டம் பிரதர்ஸ் 1993
என்னோடிஷ்டம் கூடாமோ 1992
இன்ஸ்பெக்டர் பல்ராம் 1991
இன்னத்தெ புரோக்ராம் 1991
பூக்காலம் வரவாயி 1991
சவுஹ்ரதம் 1991
டாக்டர் பசுபதி 1990
கௌதுகவார்த்தைகள் 1990
மாலையோகம் 1990
ஒருக்கம் 1990
சாந்திரம் 1990
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம் 1989
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள் 1989
சின்ன வீடு 1985
இது நல்ல தமாஷ் 1985
மஞ்ஞு 1983

வெளி இணைப்புகள்

நடிகை கல்பனா – விக்கிப்பீடியா

Actress Kalpana – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *