மஞ்சு வாரியர் (பிறப்பு: செப்டம்பர் 10, 1978) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆகும் .இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்
இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.
வெளி இணைப்புகள்
நடிகை மஞ்சு வாரியர் – விக்கிப்பீடியா