பிரணதி (Pranathi) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இவர் கம்பீரம் (2004) படத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார், பின்னர் இவர் தமிழ், கன்னடம், மலையாள படங்களிலும் தோன்றினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பிராணதி மலையாள நடிகர் ஜோஸ் மற்றும் ரத்னபிரபா ஆகியோருக்கு 1987 ஏப்ரல் 19 அன்று பிறந்தார். இவர் 2011 செப்டம்பரில் டாக்டர் சிவராஜனை மணந்தார்
தொழில்
இவர் ஜெயராஜின் மலையாள வெற்றித் திரைப்படமான 4 தி பீப்பிள் (2004) படத்தில் பிரணதி பரத்துடன் இணைந்து அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டில், நடிகர் ஜெய் ஆகாசுடன் குருதேவா மற்றும் காற்றுள்ளவரை படங்களைத் தயாரிக்கும் போது, இந்த ஜோடி ஊர்சுற்றியதாக தகவல்கள் வெளியாயின. 2005 ஆம் ஆண்டு, இவருக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு இவர் சந்தோஷா என்ற கன்னட திரைப்படத்திலும், சத்யராஜ் நடித்த வணக்கம் தலைவாவிலும் தோன்றினார்.
மேலதிக படவாய்ப்புகளைப் பெற இயலாமல் போனதால் இவர் விரைவில் திரைத்துறையிலிருந்து விலகினார்.
நடித்த திரைப்படங்கள்
2004 | 4 தி பீப்பிள் |
---|---|
2004 | கம்பீரம் |
2005 | குருதேவா |
2005 | சந்தோஷா |
2005 | காற்றுள்ளவரை |
2005 | வணக்கம் தலைவா |
2006 | சாரதா சரதகா |