நடிகை சுமிதா பட்டீல் | Actress Smita Patil

சுமிதா பட்டீல் (அக்டோபர் 7,1955 – டிசம்பர் 13,1986) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். இவரது காலத்தில் இருந்த மேடை மற்றும் திரைப்பட நடிகைகள் மத்தியில் இவரது பங்கு மிகச்சிறப்பாக இருந்தது இவர் இந்தி மற்றும் மராத்திய மொழியில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில், பிலிம்பேர் விருது மற்றும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றுள்ளார்.


சுமிதா படீல் புனே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். சியாம் பெனகல் இயக்கத்தில் சரந்தா சோர் (1975) என்ற படத்தில் இவர் அறிமுகமானார்.


இவர் திரைப்படங்களில் பல்வேறு கதா பாத்திரங்களை ஏற்று நடித்தார். இவரது நடிப்பில் மந்த்தன் (1977), பூமிகா (1977), ஆக்ரோஷ் (1980 ), (1981), சிதம்பரம் (1985), மிர்ச் மசாலா (1985) ஆகிய கதாபாத்திரங்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவையாகும்..


நடிப்பை தவிர, படீல் ஒரு பெண்ணியவாதியாகவும், மும்பையில் உள்ள மகளிர் மையத்தில் உறுப்பினராகவும் இருந்தார். பெண்களின் பிரச்சினைகளை களைவதற்கு அவர் மிகவும் உறுதியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய சமுதாயத்தில் பாரம்பரிய பெண்களின், மற்றும் நகர்ப்புற சூழலில் நடுத்தர வர்க்க பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை சார்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.


இவ ராஜ் பாபர் என்னும் நடிகரை மணந்தார். சுமீதா படீல் தனது 31ம் வயதில் (13 திசம்பர் 1986) பேறுகாலத்தில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக இறந்தார். அவர் நடித்த பத்து படங்கள் அவரது இறப்பிற்கு பின் வெளியிடப்பட்டன. அவரது மகன் பிரதீக் பாபரும் திரைப்பட நடிகராக 2008 இல் அறிமுகமானார்.


இளமைப்பருவம்


சுமிதா பட்டீல், மகாராட்டிரம், புனேயில் பிறந்தார். இவரது தந்தை சிவாஜிராவ் கிரிதர் பட்டீல் – மகாராஷ்டிர அரசியல்வாதி இவரின் தாய் வித்யாதை பட்டீல் ஒரு சமூக சேவகி ஆவார். இவர் ரேணுகா ஸ்வரூப் நினைவு உயர் நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். மும்பை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக 1970 ஆம் வருடம் பணியில் சேர்ந்தார்.


தொழில்


சுமிதா பட்டீல் 1970 களில் நடித்த ஷபனா ஆஷ்மி போன்ற நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியவர். அவர் புகழ் பெற்ற இயக்குனர்களான சியாம் பெனகல், கோவிந்த் நிகாலினி மற்றும் சத்யஜித் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடித்தார். அதே சமயம், மற்ற வர்த்தக ரீதியான படங்களிலும் நடித்தார். இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். சிறந்த புகைப்பட வல்லுனராகவும் இருந்தார்.


வெளி இணைப்புகள்

நடிகை சுமிதா பட்டீல் – விக்கிப்பீடியா

Actress Smita Patil – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *