சிறீதேவிகா (Sridevika) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.
ஆரம்ப நாட்களில்
சிறீதேவிகா கேரளத்தின் பாலக்காட்டில் பிறந்தாவர். இவர் 2010 மார்ச்சில் விமானியான ரோஹித் ராமச்சந்திரனை மணந்தார்.
இவர் தமிழ் திரைப்படங்களில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக அகத்தியனின் ராமகிருஷ்ணா (2004) படத்தின் வழியாக நுழைந்தார்.அதைத் தொடர்ந்து அந்த நாள் ஞாபகம் (2005) படத்தில் நடித்தார். பின்னர் ராஜபாபு போன்ற தெலுங்கு படங்களிலும், மலையாள படங்களான அவன் சாண்டியுடே மகன் (2007), பார்த்தன் கண்ட பரலோகம் (2008), “மஞ்சாடிகுரு” (2012) போன்ற படங்களிலும், சுதீப் ஜோடியாக மை ஆட்டோகிராப் (2006) உள்ளிட்ட கன்னட படங்களிலும் தோன்றினார். தற்போது அவர் ரேண்டம் வெகரம் என்ற மலையாள வலைத் தொடரை இயக்குகிறார்.
நடித்த திரைப்படங்கள்
2004 | கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு |
---|---|
2004 | ராமகிருஷ்ணா |
2005 | அந்த நாள் ஞாபகம் |
2005 | அன்பே வா |
2006 | ராஜபாபு |
2006 | மை ஆட்டோகிராப் |
2006 | நீலகண்டா |
2007 | சாந்தா |
2007 | க்ஷான க்ஷானா |
2007 | அவன் சாண்டியுடே மகன் |
2008 | பார்த்தன் கண்ட பரலோகம் |
2008 | செம்படா |
2009 | ஞாபகங்கள் |
2009 | மாயமாலிகா |
2012 | மஞ்சாடிகுரு |
2017 | ரேண்டம் வெகரம் |
2018 | ஓரு குப்ரசிதா பயன் |
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்ரீதேவிகா – விக்கிப்பீடியா