ஸ்ரீலட்சுமி (Sreelekshmi) இவர் மலையாள மொழித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார். இவர் சிறந்த நடிகைக்கான இரண்டு கேரள மாநிலத் தொலைக்காட்சி விருதையும், இரண்டாவது சிறந்த நடிகைக்கான ஒரு கேரள மாநிலத் திரைப்பட விருதையும் வென்றுள்ளார் .
தனிப்பட்ட வாழ்க்கை
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள வழுதாக்காடு என்ற ஊரில் மூன்று குழந்தைகளில் இளைய குழந்தையாக பாஸ்கரன் நாயர் மற்றும் ராஜேஸ்வரியம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு கிருஷ்ணகுமார் மற்றும் விஜய் பாஸ்கர் என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். திருவனந்தபுரத்தின் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். கேரள பல்கலைக்கழகத்தில் 1991இல் கலாதிலகம் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பிற்குப் பிறகு, சென்னையிலுள்ள கலாசேத்ராவில் பாரத நாட்டியத்தை பயின்றார்.
இவர் துபாயை தளமாகக் கொண்ட இன்டீரியர் ஃபிட் அவுட் என்ற நிறுவனத்தில் பொது மேலாளரான ரத்தீஷ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனந்த் மகேசுவர் மற்றும் அக்சித் மகேசுவர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், குடும்பத்துடன் துபாயில் குடியேறினார். துபாயில் இருந்தபோது ஒரு நடனப் பள்ளியை நடத்துவதில் மும்முரமாக இருந்தார். இவர் 2012இல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க மீண்டும் இந்தியா வந்தார். தற்போது இவர் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். திருவனந்தபுரத்தின் குரவன்கோனத்தில் டெம்பிள் ஆப் ஆர்ட்ஸ் என்ற ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
விருதுகள்
அவலூத் கதா அணியுடன் சூர்யா தொலைகாட்சியில் சூர்யா சவால் என்ற பிரபலமான விளையாட்டு நிகழ்சியில் பங்கேற்றுள்ளார். இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தூர்தர்ஷன் மலையாளத்தில் ஒளிபரப்பப்படும் பீட் த ஃப்ளோர்ஸ் என்ற உண்மை நிகழ்ச்சியில் நடுவராக தோன்றி வருகிறார்.
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்ரீலட்சுமி – விக்கிப்பீடியா