நடிகை துலிப் ஜோஷி | Actress Tulip Joshi

துலிப் ஜோஷி (Tulip Joshi) 1979 செப்டம்பர் 11 அன்று பிறந்துள்ள ஒரு இந்திய நடிகை ஆவார். இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.


இளமைப்பருவம்


ஜோசி மும்பையில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் இந்தியத் தந்த்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். அவர் மும்பையில் வளர்க்கப்பட்டார், அங்கு அவர் ஜாம்நபாய் நர்சி பள்ளியில் பயின்றார், மேலும் பின்னர் விவேக் கல்லூரியில் “உணவு அறிவியல் மற்றும் வேதியியல்” பட்டம் பெற்றார்.


2000 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியாவிற்குள் துலிப் நுழைந்தார். வெற்றியாளர்களின் பட்டியலில் அவர் சேரவில்லை என்றாலும் இவர் பல விளம்பர நிறுவனங்களால் கவனிக்கப்பட்டார். அவர் பாண்ட்ஸ், பெப்சி, சியாராம்ஸ், பிபிஎல், ஸ்மிர்னாப், டாட்டா ஸ்கை மொபைல் தொலைக்காட்சி போன்ற பல விளம்பரங்களில் தோன்றினார். அவர் நுசுரத் பதே அலி கானுக்கு அஞ்சலி செலுத்திய ஒரு வீடியோவில் தோன்றினார். .


தொழில்


ஜோஷி தற்சசெயலாக திரைத்துறையில் நுழைந்தார். அவர் இயக்குனர் யஷ் சோப்ராவின் மகனான ஆதித்யா சோப்ராவின் மணமகளின் நண்பராக இருந்தார். அக்குடும்பத்தினர் தங்கள் திருமணத்தில் அவரை கவனித்தனர், மேலும் அவரை நடிக்கும்படி கேட்டுக் கொண்டனர், அதன்பின் அவர்கள் அவரை மேரே யர் கி ஷாடி ஹாய் என்றப் படத்தில் நடிக்க வைத்தனர். இவர் இந்தியில் சரளமாக இல்லாத காரணத்தால் பெரோஸ் கானின் ஸ்டுடியோவில் இந்தி பயிற்சி மேற்கொண்டார். திரைப்படத் தயாரிப்பாளர் அவரின் பெயரை இன்னும் அதிகமான இந்தியர்களிடம் கொண்டு செல்வதற்காக மாற்ற அறிவுறுத்தினர். “சஞ்சனா” என்ற பெயரை அவள் தேர்வு செய்தார், அந்த படத்தில் அஞ்சலியின் பாத்திரத்தில் நடித்தார். படம் மிகவும் வெற்றி பெற்றது. நல்ல விமர்சனங்கள் மற்றும் வெற்றி இருந்தது, மேலும் துலிப் அவரது நடிப்பிற்காக பாராட்டப்பட்டார்.


வெளி இணைப்புகள்

நடிகை துலிப் ஜோஷி – விக்கிப்பீடியா

Actress Tulip Joshi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *