நடிகை உமாசங்கரி | Actress Uma Shankari

உமா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.


தொழில்


இவர் 2006 ஆம் ஆண்டில், சிபிராஜுக்கு ஜோடியாக சக்தி சிதம்பரத்தின் கோவை பிரதர்ஸ் படத்தில் தோன்றினார். அதில் சத்தியராஜின் மருமகளாக நடித்தார். மேலும் புதுமுகங்களுடன் தொடாமலே என்னும் படத்தில் நடித்தார். சிக்கம்மா (புகழ்பெற்ற தமிழ் தொலைக்காட்சி த் தொடரான “சித்தி” இன் கன்னட மறு ஆக்கம்) மற்றும் வள்ளி ( புதிய தமிழ் தொலைக்காட்சித் தொடர்) போன்ற சில தொடர்களிலும் இவர் நடித்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை


கன்னட திரையுலகின் வணிக இயக்குனரான டி. இராஜேந்திர பாபு மற்றும் நடிகை சுமித்ரா ஆகியோருக்கு உமா பிறந்தார். இவரது தங்கை, நட்த்திரா, 2011 இல் டூ என்ற படத்தில் அறிமுகமானார். இவர் படங்களில் நடிப்பதபடி, இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்றார்.


இவர் இறுதியில் 2006 சூன் 15 அன்று பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக உள்ள எச். துஷ்யந்தை மணந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

நடித்த திரைப்படங்கள்

2000 வீரநடை
வானவில்
2001 அம்மோ பொம்மா
கலகலப்பு
நவ்வுத்து பாதகலிரா
கடல் பூக்கள்
2002 குபேரன்
வசந்தமாலிகா
திலகம்
2003 சொக்கத்தங்கம்
சூரி
விகடன்
சபலம்
கல்யாண ராமுடு
2004 தென்றல்
ரைட்டா தப்பா
ஈ ஸ்னேஹதீரத்து
சுவாமி
2005 அமுதே
செல்வம்
2006 உப்பி தாதா எம்.பி.பி.எஸ்
லட்சுமி
கோவை பிரதர்ஸ்
தொடாமலே
இலக்கணம்
கள்ளரால்லி ஹூவாகி
அடைக்கலம்
2007 மணிகண்டா
ரசிகர் மன்றம்
2012-2013 சிக்கம்மா
வள்ளி

வெளி இணைப்புகள்

நடிகை உமாசங்கரி – விக்கிப்பீடியா

Actress Uma Shankari – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *