நடிகை அஸ்வினி நாச்சப்பா | Actress Ashwini Nachappa

அஸ்வினி நாச்சப்பா (Ashwini Nachappa; பிறப்பு அக்டோபர் 21, 1967 ) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் தடகள விளையாட்டு வீரரும் இந்திய திரைப்பட நடிகையுமாவார். 1980 களின் துவக்கத்தில் தடகளப் போட்டிகளில் புகழ் பெற்றவர்; இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பி. டி. உஷாவை வென்றுள்ளார். அமெரிக்கத் தடகள வீராங்கனையான பிளோஜோவுடன் (FloJo) ஒப்பிட்டு, ”இந்தியாவின் பிளோஜோ என அழைக்கப்படுகிறார். 1988 ஆம் ஆண்டில் அருச்சுனா விருது பெற்றார். ஒரு குறிப்பிடத்தக்க சமூக செயற்பாட்டாளரும் கல்வியியலாளருமாவார். அவர் ஒரு பள்ளியினை நிறுவியுள்ளார். தற்போது அவர் பெங்களூரு நகர மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் ஆவார்.


சாதனைகள்


மூன்று தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு அவர் பெற்ற வெற்றிகள்: 1984 இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள்; 1986 இல் வங்காள தேசத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள்; 1988 பாக்கிஸ்தானில் நடத்தப்பட்ட தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 தங்க பதக்கங்கள். இரண்டு ஆசிய விளையாட்டுக்களில் அவர் கலந்து கொண்டார். 1986 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் 6 வது இடத்தினைப் பிடித்தார். 1990 இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 100 மீ தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்). அவர் இரண்டு உலக வாகையர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார் (ரோம் நகரில் 1987 மற்றும் 1991 ஆம் ஆண்டில் டோக்கியோவில்; அவர் இரண்டு சந்தர்ப்பங்களிலும் 4 × 400 மீ தொடர் ஓட்டம் உறுப்பினராக இருந்தார்).


சினிமா


”அஸ்வினி” என்ற பெயரில் அவரது சொந்த வாழ்க்கைத் திரைப்படம் உட்பட்ட,சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். ”அஸ்வினி” திரைப்படத்தில் அவருக்கு சிறந்த நடிகைக்கான மாநில நந்தி விருது கிடைத்துள்ளது.


நடித்த திரைப்படங்கள்


  • அஸ்வினி (1991)

  • இன்ஸ்பெக்டர் அஸ்வினி (1993)

  • ஆதர்சம் (1993)

  • மிஸ் 420 (1995)

  • ஆண்டர்ரூ ஆன்டரே (1996)

  • வெளி இணைப்புகள்

    நடிகை அஸ்வினி நாச்சப்பா – விக்கிப்பீடியா

    Actress Ashwini Nachappa – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *