நடிகை ஆயிஷா தாக்கியா | Actress Ayesha Takia

ஆயிசா தாக்கியா ஆசுமி, (இந்தி: आयेशा टाकिया आजमी, Ayesha Takia, ஆயிஷா தாக்கியா; பிறப்பு: ஏப்ரல் 10, 1986)) பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை.


ஆரம்பகால வாழ்க்கை


ஆயிசா தாகியா மும்பையில் குசராத்தியான நிசித் என்பவருக்கும், மகாராட்டிரத்தை சார்ந்த ஆங்கிலோ இந்தியரான பரிதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவருக்கு நடாசா என்ற இளைய சகோதரி உள்ளார்.


தொழில் வாழ்க்கை


ஆயிஷா “நான் ஒரு காம்ப்ளான் பெண்” என்ற விளம்பரப்படத்தில் நடித்ததில் இருந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய பதினைந்தாவது வயதில் பால்குனி பாதக்கின் மேரி சுனரி உத் உத் சாயே என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் தோன்றினார். இதன் பிறகு பதினாறாவது வயதில் சேக் இட் டாடி என்ற இசைப்பாடல் நிகழ்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன; சோச்சா நா தா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சோச்சா நா தா படத் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால், டார்சான்: தி வொண்டர் கார் என்ற படம் இவருடைய அறிமுகப்படமானது. இப்படத்தில் நன்றாக நடித்ததற்காக 2004ம் ஆண்டுக்கான பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை ஆயிசா வென்றார். நாகேசு குக்குநூரின் டோர் படத்தில் தரன் ஆதர்சுடன் இணைந்து நடித்து அதற்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் பின்னர் மற்ற நடிகைகள் ஆரம்ப கட்டத்தில் ஏற்கத் தயங்கும் கவர்ச்சியற்ற வேடங்களில் நடிக்க சம்மதித்தார். சூப்பர் என்ற தெலுங்குப் படத்தில் அக்கினேனி நாகார்சுனாவுடன் நடித்தார். 2009 இல் சல்மான் கானுடன் ஆயிசா இணைந்து நடித்த “”வாண்டட்”” என்ற பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


சொந்த வாழ்க்கை


ஆயிஷா 2009 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று, இசுலாமிய திருமண வழக்கப்படி பர்கன் அசுமியை மணந்தார். பர்கன் ஆசுமி சமாஜ்வாதி கட்சி தலைவர் அபு அசுமி யின் மகனும் உணவக விடுதி உரிமையாளரும் ஆவார்.


விருதுகள்


  • 2005, பிலிம்பேர் சிறந்த அறிமுக விருது (படம்: டார்சான்:தி வொண்டர் கார்)

  • 2004, ஐஐஎப்எ அறிமுக நட்சத்திரம்

  • 2005, நட்சத்திரங்களின் நீங்கள் விரும்பும் கதாநாயகி

  • 2007, டோர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான இசுடார் இசுக்ரீன் விருது

  • 2007, டோர் படத்திற்காக இசுடார்டசுட் சிறந்த துணை நடிகை விருது

  • 2007, டோர் படத்திற்காக பெங்கால் சினிமா பத்திரிக்கையாளர்கள் குழுமத்தின் சிறந்த நடிகைக்கான விருது

  • 2007, டோர் படத்திற்காக குல் பனாகுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான ஜீ சினிமா விருது
  • நடித்த திரைப்படங்கள்

    டார்சன்: தி வொண்டர் கார் 2004
    தில் மாங்கே மோர் 2004
    சோச்சா நா தா 2004
    ஷாதி நம்பர் 1 2005
    சூப்பர் 2005
    ஹோம் டெலிவர்: ஆப்கோ கர் தக் 2005
    சாதி சே பெக்லே 2006
    யூம் கோதா தொ க்யா கோதா 2006
    டோர் 2006
    சலாம்-ஈ-இஷ்க் 2007
    கியா லவ் இசுடோரி அய் 2007
    பூல் அண்ட் பைனல் 2007
    கேசு (ரொக்கம்) 2007
    ப்ளட் பிரதர்சு (இரத்த சகோதரர்கள்) 2007
    நோ இசுமோக்கிங் 2007
    சண்டே 2008
    தே தாலி 2008
    8 X 10 தசுவீர் 2009
    வான்டட் 2009
    பாத்சாலா 2009
    அப் டில்லி தூர் நகின் 2009
    எம்ஓடி(MOD) 2011
    ஆப் கே லியே அம் 2013

    வெளி இணைப்புகள்

    நடிகை ஆயிஷா தாக்கியா – விக்கிப்பீடியா

    Actress Ayesha Takia – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *