நடிகை இஷிதா தத்தா | Actress Ishita Dutta

இஷிதா தத்தா (Ishita Dutta ஆகஸ்ட் 26, 1990) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார், 2015ல் வெளிவந்த பாலிவுட் அதிரடி திகில்த் திரைப்படமான திரிஷ்யம் படத்தில் அவரது வேடத்திற்கும் மற்றும், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்தி தொலைகாட்சித் தொடர் ஏக் கர் பனூங்கா என்பதில் நடித்ததனால் நன்கு அறியப்படுகிறார். நடிகை தனுஸ்ரீ தத்தாவின் இளைய சகோதரி ஆவார்.


ஆரம்ப வாழ்க்கை


தத்தா சார்க்கண்டில் உள்ள ஜம்சேத்பூரில் பென்காலி இந்து குடும்பத்தில் பிறந்துள்ளார். தத்தா ஜம்சேத்பூர் டி.பி.எம்.எஸ் ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார், பின்னர் ஊடகப்படிப்பினை மும்பையில் படித்தார். அவரது சகோதரி, 2004இல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்ற இவரது சகோதரி தனுஸ்ரீ தத்தாவும் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.


நடிப்பு


தத்தா 2012இல் வெளியான சாணக்கியடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகர் தனிஷ்க்கு நாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நியாஸ் அகமது தயாரிப்பில் ஹெச். ஆர். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த யேனிடு மனசாலி என்ற படத்தில் இவரும் இவரது சகோதரி தனுஸ்ரீ தத்தாவும் இணைந்து பணியாற்னர், ஆனால் அது முழுமையடையாத காரணத்தால் வெளியிடப் படவில்லை. பின்னர் இவர், ஏக் கர் பனூங்கா என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2016இல், லைப் ஓகே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரிஸ்தோன் கா சௌதாகர்- பாஸிகர் என்ற நிகழ்ச்சியில் நடிகர் வத்சல் சேத்திற்கு இணையாக நடித்திருந்தார்.. இவர் பாலிவுட் திரைப்படமான திரிஷ்யம் படத்தில் நடிகர் அஜய் தேவ்கான், தபூ மற்றும் சிரேயா சரன் ஆகியோருடன் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கானின் மகளாக நடித்திருந்தார். கபில் ஷர்மாவுடன் அவர் ஃபிராங்கி படத்தில் பணிபுரிந்தார்.


சொந்த வாழ்க்கை


இஷிதா தத்தா தனது நீண்டகால காதலர் மற்றும் முன்னாள் துணை நட்சத்திரமான வத்சல் சேத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

வெளி இணைப்புகள்

நடிகை இஷிதா தத்தா – விக்கிப்பீடியா

Actress Ishita Dutta – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *