நடிகை கிரிதி கர்பந்தா | Actress Kriti Kharbanda

கிரிதி கர்பந்தா (Kriti Kharbanda ) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் அக்டோபர் 29, 1990 இல் பிறந்தார். பெரும்பான்மையான படங்களைக் கன்னடத்தில் நடித்துள்ளார். அதே சமயம் இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விளம்பரத் தோற்றமாக (மாடல்) ஆரம்பித்த இவரின் வாழ்க்கை போனி என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தத் திரைப்படம் 2009 ஆம் ஆண்டில் வெளியானது. இவர் தற்போது தமிழகத் திரைப்படத்துறை மற்றும் ஆந்திரத் திரைப்படத்துறைகளில் தலா ஒரு படங்களில் நடித்திருக்கிறார்.


2015 ஆம் ஆண்டில்பெங்களூர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஓட்டெடுப்பில் மிகவும் விரும்பத்தகுந்த பெண்களின் பட்டியலில் இவர் இடம்பிடித்திருக்கிறார்.


ஆரம்பகால வாழ்க்கை


கிரிதி கர்பாந்தா புது தில்லியில் அஷ்வானி கர்பாந்தா மற்றும் ரசினி கர்பாந்தா தம்பதிக்கு மகளாக அக்டோபர் 29, 1990 இல் பிறந்தார். இவருக்கு இசிதா கர்பாந்தா எனும் இளைய சகோதரியும் ஜைவர்தன் கர்பாந்தா எனும் இளைய சகோதரனும் உள்ளனர். இவருடைய சகோதரர் பெங்களூருவில் பேப்பர் பிளேன் புரொடக்சன்ஸ் எனும் படமனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பிறந்தபோதே இவருடைய குடும்பம் பெங்களூருவிற்கு குடியேறியது. பேல்ட்வின் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின் ஸ்ரீ பகவான் மகாவீரர் ஜெயின் கல்லூரியில் பட்டம் பெற்றார். நகை வடிவமைப்பதில் பட்டயம் பெற்றுள்ளார்.


கிரிதியின் கூற்றுப்படி தான் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். குழந்தைப்பருவத்திலேயே விளம்பரத் தோற்றமாக நடித்ததாகவும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலும் அதனைத் தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார். அவ்வாறு தொலைக்காட்சியில் விளம்பரத்தோற்றமாக நடிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கல்லூரிக் காலத்திலேயே பீமா நகைக் கடை, ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இவர் ஸ்பேர் நிறுவனத்தின் விளம்பரத் தோற்றமாக இருந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ராஜ் பிப்பாலா எனும் இயக்குனர் தன்னுடைய திரைப்படத்திற்கு இவரை ஒப்பந்தம் செய்தார். தமக்கு நடிகையாக வருவது பற்றி எந்த விதமான கனவுகளும் இருந்ததில்லை எனவும் தனது தாயாரின் ஊக்கத்தில் தான் நடிகை ஆனேன் எனக் கூறியுள்ளார்.


திரைப்பட வாழ்க்கை


முதல் திரைப்படம் (2019- 2012)


ஸ்பேர் எனும் நிறுவனத்தின் விளம்பரத்தோற்றத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த பின்பு போனி எனும் தெலுங்குப் படத்தில் சுமந்துடன் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். போனி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்காத போதிலும் கிரிதியின் நடிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இவரின் முதல் படம் போன்று அல்லாது சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் என சிஃபி வலைத்தளம் எழுதியது. ரெடிஃப் வலைத்தளம் கிரிதி கர்பாந்தா அழகாக பிரகதி எனும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிசிலும் தோல்வி பெற்றது. இவருடைய அடுத்தபடம் பவன் கல்யாணின் தீன் மார் .


சிரு எனும் தனது முதல் கன்னடத்திரைப்படத்தில் நடித்தார். இது அனைத்து தரப்பிடமும் நல்ல வரவேற்பைப்பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரது நடிப்புத் திறன் நன்றாக உள்ளது எனக் கூறியது. இந்தியா கிளிட்ஸ் “இவர் பார்ப்பதற்கு அழகாக உள்ளார். இவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறனும் படத்திற்குப் பொருத்தமாக உள்ளது எனக் கூறியுள்ளது. சிறப்பாக நடனமாடுவதாக இயன்ஸ் கூறியது. 2010 இல் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலையும் பெற்றது. இதன் மூலம் அவருக்கு கன்னட திரையுலகில் புதிய திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்தன. ஆனால்தனது இரன்டாவது திரைப்படத்தை ஒப்பந்தம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டார். அக்டோபர் 2011 இல் ஒரே மாதத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.


வெளி இணைப்புகள்

நடிகை கிரிதி கர்பந்தா – விக்கிப்பீடியா

Actress Kriti Kharbanda – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *