கிருத்தி சனோன் (Kriti Sanon) (பிறப்பு 27 ஜூலை 1990) இந்தி படங்களில் முதன்மையாக நடிக்கும் நடிகை. இவர் பிறந்து வளர்ந்தது புது தில்லியில். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிறிது காலத்திற்கு மாதிரியாக பணியாற்றினார். தெலுங்குத் திரைப்படமான 1: நெநோக்கடனினே (2014) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகனார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
பின்னர் தொடந்து வணிக ரீதியாக வெற்றிகரமான மூன்று திரைப்படங்களில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் கிருத்தி நடித்தார். நகைச்சுவை படமான தில்வாலே (2015), காதல் நகைச்சுவைப்படமான பரேலி கி பர்ஃபி (2017) மற்றும் லூகா சுப்பி (2019) ஆகிய மூன்று படங்களில் நடித்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
1990 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கிருத்தி சனோன் ஒரு பட்டய கணக்கறிஞரான ராகுல் என்பவருக்கும், தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கீதா என்பவற்கும் பிறந்தார். கிருத்திக்கு நுபுர் என்ற ஒரு இளைய சகோதரி உள்ளார். இவர் தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். நொய்டாவில் ஜெய்பே இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் , எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரியில் பட்டம் முடித்தார்.
கிருத்தி சானன் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தார். க்ளோஸ் அப், விவல், அமுல் , சாம்சங் , ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்து வந்தார். [ சான்று தேவை ]
வெளி இணைப்புகள்
நடிகை கிருத்தி சனோன் – விக்கிப்பீடியா