மீரா வாசுதேவன் (Meera Vasudevan பிறப்பு 29 ஜனவரி 1982) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மையாக தோன்றியுள்ளார். இவர் 2005 இல் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதில் சிறப்பு பரிசையும் சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதையும் பெற்றார் . தற்போது இவர் ஏஷ்யாநெட்டில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற மலையாள தொலைக்காட்சித் தொடரான குடும்பவிளக்கில் நடித்துவருகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
மீரா மகாராட்டிரத்தின் மும்பையில் ஒரு தமிழ் குடும்பத்தில் வசுதேவன் மற்றும் ஹேமலதா ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை அஸ்வினி, சல்மான் கான் நடித்த ஜானம் சம்ஜா கரோ படத்தில் குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்றார். இவர் இளங்கலை உளத்தியல் மற்றும் ஆங்கில இலக்கியதில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, வடிவழகியாக ஆனார், பல விளம்பரப் படங்களில் தோன்றினார், புகழ் பெற்றார். ஐ.சி.சி செட்மேக்ஸ் விளம்பரத்தின் வெற்றி, இவருக்கு திரையுலகில் நுழைய காரணமாயிற்று.
தொழில்
திரைப்படத் துறையில் இவரது நுழைவானது 2003 இந்தி நையாண்டி திரைப்படமான ரூல்ஸ்: பியார் கா சூப்பர்ஹித் ஃபார்முலா படத்தில் மிலிந்த் சோமனுடன் இணைந்து நடித்ததன் வழியாக நடந்தது. சுமார் 500 தோல்வியுற்ற திரை சோதனைகளுக்குப் பிறகு, பிரஹ்லத் கக்கரின் ஷாட்மேக்ஸ் விளம்பரம் அந்த ஆண்டின் சிறந்த விளம்பரப் படமாக தேர்வானது. இதை இயக்குனர் பார்வதி பாலகோபாலனின் தாயார் கவனித்தார். இதன் பிறகு இவருக்கு பியார் கா சூப்பர்ஹித் ஃபார்முலா படத்தில் நடிக்க திரை சோதனை நடத்தபட்டு பட வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்தற்காக ஸ்கிரீன் விருதுகள் மற்றும் சான்சுய் – பிஎன்சி விருதுகளால் இவர் சிறந்த அறிமுகமாகவிருக்கும் நடிகையாக பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும் இவரது தெலுங்கு திரைப்படமான கோல்மால் முதலில் வெளியானது, அதே ஆண்டில் இவர் தமிழ் திரையுலகில் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உன்னைச் சரணடைந்தேன் படத்தின் வழியாக அறிமுகமானார். இதில் வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் ஆகியோருடன் நடித்தார். அப்படத்தில் பாபி என்னும் ஒரு பிடிவாதமாக கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. மேலும் இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.
தெலுங்கில் அஞ்சலி ஐ லவ் யூ, தமிழில் அறிவுமணி போன்ற தோல்விப் படங்களுக்குப் பிறகு, இவர் மலையாளம் திரையுலகுக்கு நகர்ந்தார். 2005 ஆம் ஆண்டு தன்மாத்ரா இயக்கிய பிளஸ்சி என்ற வெளியான மலையாளப்படமான படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். அப்படத்தில் இல்லத்தரசி மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான லேகா ரமேசன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதில் இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் 2005 உஜாலா-ஏசியானெட் விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்.
2006 ஆம் ஆண்டில், இவர் ஜாது சா சல் கயா என்ற இந்தி படத்தில் நடித்தார், அதைத் தொடர்ந்து இவர் ஜெர்ரி என்ற தமிழ் நகைச்சுவைத் திரைப்படத்தில் காவல் ஆய்வாளராகவும், மலையாள நாடகத் திரைப்படமான ஒருவானிலும் தோன்றினார். அதில் இவர் மீண்டும் ஒரு இல்லத்தரசி பாத்திரத்தை ஏற்றார். மீரா அடுத்து ஏகாந்தம், வால்மீகம், காக்கி போன்ற பல மலையாள மொழி படங்களில் நடித்தார். மேலும் செயின் குலி கி மெய்ன் குலி மற்றும் 2007 இல் தோடி லைஃப் தோடா மேஜிக் ஆகிய இந்தி படங்களில் நடித்தார். அதேசமயம் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முறையே பெண் மற்றும் கனல்பூ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானார். கனல்பூ தொடரில் நடித்த இவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருது கிடைத்தது. இது மலையாளி பார்வையாளர்கள் மத்தியில் தொலைக்காட்சி, திரைப்படங்களில் இவரை ஒரு முக்கிய நபராக ஆக்கியது.
2009 ஆம் ஆண்டில் இவர் நடித்த ஓர்குகா வல்லப்புழம், டீசண்ட் பார்டிஸ், வைரம்: ஃபைட் ஃபார் ஜஸ்டிஸ், ஆகிய மூன்று மலையாள திரைப்படங்கள் வெளியாயின. இதில் பாலியன் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பெண்ணின் தாயான ஒரு மலையாளி இல்லத்தரசியாக நடித்திருந்தார். நான்காவதாக வெளிவந்த படமாக சக்தி வாசு மற்றும் ரம்யா நம்பிசனுடன் இணைந்து நடித்த ஆட்ட நாயகன் படமாகும். இவர் தற்போது பணிபுரியும் படங்களில் 1940 களில் நடப்பதாக சித்தரிக்கபட்ட ஒரு வரலாற்று நாடகத் திரைப்படமான தசையினை தீ சுடினும் படமும் அடங்கும்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இவர் 2017 இல் சக்கரமாவின் கொம்பத்து படத்தின் வழியாக மீண்டும் மலையாள படங்களில் நடிக்க வந்தார். பின்னர் சைலன்ஸ், அப்புவிண்ட சத்யன்வேஷனம், பேக்கப்பல், பானிகிரஹனம் போன்ற வித்தியாசமான படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்தார். 2020 ஆம் ஆண்டில், மலையாள தொலைக்காட்சி தொடரான குடும்பவிளக்கில் ஏஷ்யாநெட்டில் பெண் முன்னணி பாத்திரமான சுமித்ராவாகவும், சன் தொலைக்காட்சியில் தமிழ் தொடரான சித்தி–2 இல் எதிர்மறைப் பாத்திரத்திலும் நடித்து தொலைக்காட்சியில் தனது கவனத்தை செலுத்தினார். இதன் வழியாக தென்னிந்திய பார்வையாளர்களிடையே மீண்டும் பிரபலமடைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
மீரா 2005 இல் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை மணந்தார் இவர்கள் 2010 சூலையில் மணவிலக்கு செய்து கொண்டனர். 2012 ஆம் ஆண்டில், இவர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மணந்தார், இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் பிறந்த நிலையில் 2016 இல் பிரிந்தார்.
நடித்த திரைப்படங்கள்
2003 | கோல்பால் |
---|---|
ரூல்ஸ்: பியார் கா சூப்பர்ஹிட் ஃபார்முலா | |
உன்னைச் சரணடைந்தேன் | |
2004 | அஞ்சலி ஐ லவ் யூ |
அறிவுமணி | |
2005 | தன்மாத்ரா |
2006 | ஜாது சா சல் கயா |
ஹலோ? கோன் ஹை! | |
ஜெர்ரி | |
ஒருவன் | |
2007 | ஏகாந்தம் |
காக்கி | |
செயின் குலி கி மெயின் குலி | |
2008 | தோடி லைஃப் தோடா மேஜிக் |
தசையினை தீ சுடினும் | |
கத்திக் கப்பல் | |
பச்சமரத்தனலி | |
குல்மோகர் | |
2009 | ஒர்குகா வல்லப்புழும் |
டீசண்ட் பார்டிஸ் | |
வைரம்: ஃபைட் பார் ஜஸ்டிஸ் | |
13பி: பார் ஹேஸ் எ நியூ அட்ரஸ் | |
2010 | ஆட்ட நாயகன் |
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே | |
2012 | கொச்சி |
916 | |
ஜான்லேவா பிளாக் பிளட் | |
2016 | சஹாபாடி 1975 (வால்மீகம்) |
2017 | சக்கரமாவின் கொம்பத்து |
2018 | பெயிண்டிங் லைப் |
அடங்க மறு | |
2019 | குட்டிமாமா |
அப்புந்தி சத்தியன்வேஷனம் | |
லெசன்ஸ் | |
தக்கோல் | |
கிருதி | |
பாயகப்பல் | |
2020 | சைலன்ஸ் |
தொலைக்காட்சி
2001-2002 | காவேரி |
---|---|
2002 | தேவி |
2006 | பெண் |
2007 | கனல்பூவு |
2007-2008 | சூரியவம்சம் |
2020 – தற்போது | குடும்பவிளக்கு |
2020 | சித்தி–2 |
2020 | அம்மாயாரியாதே |
2020 | அவரோடோப்பம் அலியம் அச்சாயனம் |
2020 | மௌனராகம் |
2020 | பௌர்ணமி திங்கல் |
2021 | கூட்டேவிட் |