நடிகை ராசி கன்னா | Actress Raashi Khanna

ராஷி கன்னா ஒரு இந்திய நடிகை. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர். இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் (2014) திரைப்படத்தல் அறிமுகமானார். தமிழில் இமைக்கா நொடிகள் (2018) படத்தில் நடித்திருந்தார்.


மனம் (2014) என்ற கௌரவ தோற்றத்தில் வந்தார். பின்னர் அவர் பெங்கால் டைகர் (2015), சுப்ரீம் (2016), ஜெய் லவ குசா (2017) மற்றும் தோலி ப்ரேமா (2018) போன்ற வெற்றிகரமான படங்களில் தோன்றினார்.


தொழில்


அறிமுகம் (2013-2014)


2013 ஆம் ஆண்டு இந்திய அரசியல் உளவுத் திகில் திரைப்படமான மெட்ராஸ் கபேயில் கன்னா அறிமுகமானர். அப்படத்தில் அவர் இந்திய உளவுத்துறை அதிகாரி விக்ரம் சிங்கின் மனைவியான ரூபி சிங்கின் பாத்திரத்தில் தோன்றினார். அந்த பாத்திரத்தில் நடிப்படதற்காக அவர் நடிப்பு பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டார். இந்த திரைப்படம்-குறிப்பாக கதை மற்றும் இயக்கத்தில்-நன்மதிப்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்த, என்டிடிவியின் சாய்பால் சாட்டர்ஜி, கன்னா “ஒரு சுருக்கமான ஆனால் குறிப்பிடத்தக்க தோற்றத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினார்” என்றார்.


வெற்றி மற்றும் எதிர்கால பணிகள் (2015-தற்போது வரை)


2014 டிசம்பரின் பிற்பகுதியில், அவர் சம்பத் நந்தி இயக்கிய ‘பெங்கால் டைகர் ‘ திரைப்படத்திற்காக ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது.


2018 ஆம் ஆண்டில் கன்னாவின் முதல் வெளியீடான டச் சேஸ்ஸி சூடு படத்தில் ரவி தேஜாவுடன் நடித்தார், இதில் நடனப் பயிற்சியாளராக நடித்தார். இப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்தபோதிலும் வணிக ரீதியாகத் தோல்வியுற்றது. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழில் மூன்றாவது படமாக 2018இல் ஜெயம் ரவியுடன் அடங்க மறு திரைப்படத்தில் நடித்தார்.

வெளி இணைப்புகள்

நடிகை ராசி கன்னா – விக்கிப்பீடியா

Actress Raashi Khanna – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *