ரூபா கங்குலி (பிறப்பு 25 நவம்பர் 1966) ஒரு இந்திய நடிகை, பின்னணி பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பி.ஆர் சோப்ராவின் தொலைக்காட்சித் தொடரான மகாபாரதம் (1988) நாடகத்தில் திரௌபதியின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர் இவர். மர்னல் சென் , அபர்னா சென் , கௌதம் கோஸ் மற்றும் ரிருபருனோ கோஷ் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்தார். இவர் முறையாக பயிற்சி பெற்ற பாடகர் மற்றும் நடனக்கலைஞர். தனது நடிப்புகாக தேசிய விருது மற்றும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அக்டோபர் மாதம், 2015, மாநிலங்களவையின் உறுப்பினராக , இந்தியாக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் . மேற்கு வங்கத்தில் பாஜக மகளிர் அணித்தலைவராக அவர் பணியாற்றினார்.
ஆரம்ப வாழ்க்கை
ரூபா இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே கல்யாணி என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஓர் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார். கொல்கத்தாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரியான ஜோகமயா தேவி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
வங்காள நாடகமான முக்தபந்தனாவில் (1985) நடித்ததன் மூலம் பரவலாக அனைவராலும் அறிப்பட்டு புகழ்பெற்றார். 1986இல் கணதேவதா என்ற இந்தி நாடகத்தில் நடித்ததன் மூலம் தேசிய அளவில் அறிப்பட்டார். பின்னர் மகாபாரதம் என்ற நீண்ட கால இந்தி நாடகத்தில் திரௌபதியாக நடித்ததில் இந்திய அளவில் புகழ் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கங்குலி 1992 முதல் 2006 வரை துர்போ முகர்ஜி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இருந்தார். அவர்கள் 1997 இல் ஒரு குழந்தை பெற்றனர். பின்னர் அவர்களுக்கிடையே மணமுறிவு ஏற்படும் வரை மும்பையில் வசித்துவந்தனர்.
வெளி இணைப்புகள்
நடிகை ரூபா கங்குலி – விக்கிப்பீடியா