எஸ். பி. சைலஜா (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.
பிறப்பு
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.
குடும்பம்
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார்.
பின்னணி பேசிய திரைப்படங்கள்
1983 | வசந்த கோகிலா |
---|---|
1991 | குணா |
2000 | தெனாலி |
பாடிய சில தமிழ் பாடல்கள்
பொண்ணு ஊருக்கு புதுசு | சோலைக் குயிலே காலைக் |
---|---|
கல்யாணராமன் | மனதுக்குள் ஆடும் இளமை |
ரிஷி மூலம் | வாடா ௭ன் ராஜா கண்ணா |
இளமை காலங்கள் | படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ |
உதிரிப்பூக்கள் | கல்யாணம் பாரு அப்பாவோட |
தனிக்காட்டு ராஜா | ராசாவே உன்ன நா ௭ண்ணிதா |
ஜானி | ஆசைய காத்துல தூதுவிட்டு |
பூந்தளிர் | மனதில் ௭ன்ன நினைவுகளோ |
ராஜா சின்ன ரோஜா | சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட |
மாநகர காவல் | வண்டிக்கார சொந்த ஊரு மதுர |
வெளி இணைப்புகள்
நடிகை எஸ். பி. சைலஜா – விக்கிப்பீடியா
Actress S. P. Sailaja – Wikipedia