ஷாலினி பாண்டே (பிறப்பு 23 செப்டம்பர் 1993) ஓர் இந்திய நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொழில்
சாலினி பாண்டே தனது நடிப்பு திறமையை ஜபல்பூர் மேடை நாடக நடிகராக தொடங்கினார். தெலுங்கு திரைப்படம் அர்ஜுன் ரெட்டி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் சரளமாக பேச தெரியாதப்போதும் ஷாலினி பாண்டே இந்த திரைப்படத்திற்கு சொந்தமாக பின்னணி குரல் கொடுத்தார்.
2019 அக்டோபரில் 100% காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் நடிகையர் திலகம், மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2020இல் ரன்வீர் சிங்வுடன் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி
வெளி இணைப்புகள்
நடிகை ஷாலினி பாண்டே – விக்கிப்பீடியா
Actress Shalini Pandey – Wikipedia