அச்சலா சச்தேவ் (Achala Sachdev) (3 மே 1920 – 30 ஏப்ரல் 2012) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெசாவரில் இருந்து வந்து ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்வைத் தொடங்கினார். பின்னாட்களில் அம்மாமற்றும் பாட்டி காதாப்பாத்திரங்களில் பல இந்தி படங்களில் நடித்தார். 1965 ஆம் ஆண்டில் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (1995) படத்தில் கஜோலின் பாட்டியாக நடித்ததன்மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
ஆரம்ப வாழ்க்கை
அசலா சச்தேவ் 1920 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி பெஷாவரில் பிறந்தார்.
தொழில்
அசலா அகில இந்திய வானொலி , லாகூர் இந்திய பிரிவினைக்கு முன், பின்னர் தில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அச்சலா பேஷனபிள் ஒய்ஃப் (Fashionable Wife) (1938) என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 130க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்தார். யாஷ் சோப்ரா இவர்களின் முதல் தயாரிப்பான தாக்:ஏ பொயட்டரி ஆப் லவ் (1973) சாந்தினி (1989) மற்றும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே (1995) போன்ற இவரது பல தயாரிப்புகளில் அசலா நடித்துள்ளார். மார்க் ராப்ஸனின் நைன் இவர்ல்ஸ் டு ராமா (1963) மற்றும் மெர்ச்சண்ட் ஐவரியின் த ஹவுஸ்ஹோல்டர் (1963) போன்ற ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும், இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரம் வாக்ட் (1965) இல் பால்ராஜ் சஹானியின் மனைவியாகத் தோன்றி நடித்தது ஆகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
அசலா திருமணத்திற்கு பிறகு பூணாவிற்கு குடியேறினார். இவரது கணவர் இங்கு ஒரு தொழிற்சாலை நடித்தி வந்தார். அத்தொழிற்சாலையை பின்னர் பிராமல் குழுவிற்கு விற்கப்பட்டது.