நடிகை அமலா சங்கர் | Actress Amala Shankar

அமலா சங்கர் (Amala Shankar) (பிறப்பு: 1919 சூன் ) ஓர் இந்திய நடனக் கலைஞர் ஆவார். இவர் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான உதய் சங்கரின் மனைவியும், இசைக்கலைஞர் ஆனந்த் சங்கரின் தாயும், நடிகை மம்தா சங்கர் மற்றும் இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான ரவிசங்கரின் அண்ணியுமாவார். தனது கணவர் உதய் சங்கர் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கியுள்ள கல்பனா என்றத் திரைப்படத்தில் அமலா சங்கர் நடித்துள்ளார்.


சுயசரிதை


அமலா சங்கர் 1919 இல் சூன் 27 ஆம் தேதி, பிரிக்கப்படாத வங்காளத்தின் ஜெசோர் என்ற இடத்தில் அமலா நந்தி என்ற இயற்பெயரில் பிறந்தார். பின்னர் நடன உலகில் அறிமுகமானார். 1919 ஆம் ஆண்டு இவரது தந்தை அகோய் குமார் நந்தி தனது குழந்தைகள் இயற்கையிலும் கிராமங்களிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விரும்பினார். 1931ஆம் ஆண்டில், இவர் தனக்கு 11 வயதாக இருந்தபோது, பாரிசில் நடந்த சர்வதேச காலனித்துவ கண்காட்சிக்குச் சென்றார். அங்கே இவர் உதய் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். இவர் உதய் சங்கரின் நடனக் குழுவில் சேர்ந்து உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.


1939ஆம் ஆண்டில் இவர் உதய் சங்கரின் நடனக் குழுவுடன் சென்னையில் தங்கியிருந்தபோது, ஒரு நாள் இரவில் அமலாவிடம் தனது திருமணத்தை முன்மொழிந்தார். பின்னர், உதய் சங்கர் 1942இல் அமலாவை மணந்தார். இவர்களின் முதல் மகன் ஆனந்த சங்கர் டிசம்பர், 1942இல் பிறந்தார். இவர்களது மகள் மம்தா சங்கர் சனவரி, 1955இல் பிறந்தார். உதய் சங்கர் மற்றும் அமலா சங்கர் நீண்ட காலமாக பிரபலமான நடன இணையாக இருந்தனர். ஆனால், பின்னர் உதய் சங்கர் தனது குழுவிலிருந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார். சில ஆண்டுகள், இந்த இணை தனித்தனியாக வாழ்ந்தது. சங்கர் அமலா இல்லாமல் சந்தாலிகா என்றத் திரைப்படத்தைத் தயாரித்தார். பின்னர், உதய் சங்கர் 1977இல் இறந்தார். ஆனாலும், அமலா சங்கர் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது மகள் மம்தா மற்றும் மருமகள் தனுசிறீ சங்கர் ஆகியோருடன் சங்கர் கரானாவை உயிரோடு வைத்திருக்கிறார். இவர் சித்தார் கலைஞர் ரவிசங்கரின் உறவினராவார்.


கல்பனா


இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கியுள்ள கல்பனா என்றத் திரைப்படத்தில் அமலா சங்கர் நடித்துள்ளார். அமலா உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் 2012 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அமலா சங்கர் இவ்விழாவில் கலந்து கொண்டார். அமலா சங்கர் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார் – ” 2012 கேன்ஸ் திரைப்பட விழா . . . கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் இளைய திரைப்பட நட்சத்திரமாக இருந்தேன். . . 81 வருட காலத்திற்குப் பிறகு நான் கேன்ஸை மறுபரிசீலனை செய்கிறேன். . . ”


விருது


90களின் முற்பகுதியில் கூட சுறுசுறுப்பாக செயல்பட்ட இவருக்கு, கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்பிற்காக வங்காள அரசால் 2011இல் பங்கா விபூசண் விருது வழங்கப்பட்டது.


நூறு வயது


பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான அமலா சங்கர் 2018 சூன் 27 அன்று தனது 100 வயதை எட்டினார்.


வெளி இணைப்புகள்

நடிகை அமலா சங்கர் – விக்கிப்பீடியா

Actress Amala Shankar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *