அம்ரிதா ராவ் (Amrita Rao கன்னடம்: ಅಮೃತಾ ರಾವ್, இந்தி: अमृता राव); IPA: [əmrita raʊ]; பிறப்பு: சூன் 7, 1988) என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்கு மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அப் கி பராஸ் எனும் திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் வெளியான விவாஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
2004 ஆம் ஆண்டில் வெளியான மெயின் ஹூ நா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஸ்டார் டஸ்ட் விருது மற்றும் 2008 இல் வெளியான வெல்கம் டூ சஜ்னாபூர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்த 50 விருப்பமான பெண்களில் ஒருவராகத் தேர்வானார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை தீபக் ராவ் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் சகோதரி பிரீத்திகா ராவ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கனோசா பெண் துறவியர் மடத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். சோபியா கல்லூரியில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். இவர் கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்ரிதா ராவின் தாய்மொழி தெலுங்கு ஆகும். மேலும் இவர் மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பேசுகிறார்.
தொழில் வாழ்க்கை
2002-2006
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக தனது கல்லூரிக் காலங்களில் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். ஊ பியார் மேரா எனும் இசை நிகழ்படத்தில் முதன்முதலாக நடித்தார்.
2002 ஆம் ஆண்டில் வெளியான அப் கி பராஸ் எனும் கனவுருப்புனைவு திரைப்படத்தில் அஞ்சலி தபார் எனும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவரின் கள்ளங்கபடமற்ற முகத்தோற்றம் மற்றும் நடனத் திறமை, நடிப்புத் திறன் ஆகியவை சிறப்பாக உள்ளதாக பிளானட் பாலிவுட் விமர்சனம் செய்தது. 2003 இல் ஷாஹித் கபூருடன் இணைந்து இஷ்க் விஷ்க் எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக 2003 ஆம் ஆண்டின் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் (2004) போன்றவற்றைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தனது நண்பரான அன்மோல் என்பவரை மே 15, 2016 இல் மும்பையில் திருமணம் புரிந்தார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஸ்டார் ஸ்கீரின் விருது | சிறந்த புதுமுக நடிகை |
---|---|
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை |
ஜீ சினிமா விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை |
சர்வதேச இந்தியத் திரைப்பட விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை |
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | நாளைய பெண் நட்சத்திர நடிகை |
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த பெண் துணை நடிகை |
ஸ்டார் ஸ்கீரின் விருது | சிறந்த நடிகை |
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | சிறந்த துணை(ஜோடி) |
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | சிறந்த நடிகை |
பிற விருதுகள்
சான்சுயி விருதுகள் | சிறந்த அறிமுக நடிகை |
---|---|
GR8 பெ ண்கள் விருதுகள் |
இளம் வயது சாதனையாளர் |
ஆனந்ததாலோக் விருதுகள் | சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் (பெண்) |
உலக விளையாட்டு விருதுகள் | சிறந்த துணை விருது |
கொல்கத்தா திரை விருதுகள் | சிறந்த நடிகை |
திரைப்பட விவரங்கள்
2002 | அப் கே பராஸ் |
---|---|
த லெஜண்ட் ஆஃப் பகத் சிங் | |
2003 | இஷ்க் விஷ்க் |
2004 | மஸ்தி |
மை ஹூன் நா | |
தீவார் | |
2005 | வாஹ்! லைப் ஹோ டு ஐசி (2005) |
ஷிக்கார் | |
2006 | பியாரே மோஹன் |
விவாஹ் | |
2007 | ஹேய் பேபி |
ஆதித்தி | |
2008 | மை நேம் இஸ் அந்தோனி கோன்சல்வெஸ் |
ஷௌர்யா | |
வெல்கம் டூ சாஜ்ஜன்பூர் | |
2009 | விக்டரி |
தெ கான் இஸ் ஆன் | |
லைப் பாட்னர் | |
2010 | த லிஜெண்ட் ஆப் குணால் |
ஹம் ஆப்கே ஹேய் ஹூன் 2 | |
ஹூக் யா க்ரூக் | |
2011 | லவ் யூ மிஸ்டர் கலகர் |
2013 | ஜாலி எல் எல் பி |
சிங் சாப் தெ கிரேட் | |
சத்தியாகிரகா | |
2015 | காஞ்சன்மாலா |
சத்சாங் | |
2018 | சஞ்சு |