அனு அகர்வால் ( Anu Aggarwal) 1969 ஜனவரி 11 அன்று பிறந்த இவர் ஒரு முன்னாள் இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். ஆஷ்கி, தி கிளவுட் டோர் மற்றும் திருடா திருடா “ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்
அகர்வால் 1969 ஜனவரி 11 அன்று புது தில்லியில் பிறந்தார், சென்னையில் வளர்ந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தங்கப் பதக்கம் பெற்றார். விளம்பரங்களுக்கு நடிக்க ஆரம்பித்த பின்னர், “சொல்லாடல் நிகழ்ச்சி நடத்துபவராகவும் மற்றும் “தூர்தர்ஷன்” தொலைக்காட்சித் தொடரான “இஸ் பஹேன்” (1988) என்பதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பின்னர், அவர் தனது பாலிவுட் திரைப்படமான “ஆஷிகி” என்பதில் அறிமுகமானார். இப்படத்தின் இசை ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர், அதிகமான படங்களில் தோன்ற ஆரம்பித்தார். ஒரு கார் விபத்துக்குப் பிறகு, அகர்வால் 29 நாட்களுக்கு ஆழ்மயக்கம் நிலையில் இருந்தார், இந்த நாட்களில் அவர் தனது முந்தைய வாழ்க்கையின் நினைவுகள் இல்லாமல் இருந்துள்ளார். இவர் பெங்களூரில் வாழ்கிறார். இவர் ஒரு தொழில் முறை பலு தூக்கும் வீரர் ஆவார். விபத்திற்குப் பின்னர் தொழில் முறை பலு தூக்கும் பல போட்டிகளில் போட்டியிட்டார்.
நடித்த திரைப்படங்கள்
1988 | “இசி பஹானே” |
---|---|
1990 | “ஆஷிகி” |
1992 | ” கசாப் தமாசா” |
1993 | “திருடா திருடா” |
1993 | “கிங் அங்கிள்” |
1993 | கல்-நாயக்கா” |
1994 | “த க்ளௌட் டோர்” |
1994- 1997 | பிபிஎல் ஓயே! |
1995 | ஜனம் குன்ந்தி” |
1995 | ராம் சாஸ்திரா” |
1996 | “ரிட்டர்ன் ஆப் த ஜ்வெல் தீப்” |
வெளி இணைப்புகள்
நடிகை அனு அகர்வால் – விக்கிப்பீடியா