செலினா ஜெயிட்லி (Celina Jaitly; பிறப்பு – 24 நவம்பர் 1981) ஒரு இந்திய நடிகையும் முன்னாள் அழகியுமாவார். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் வென்றவர்.
இளமைப் பருவம்
ஜெயிட்லி பஞ்சாபி தந்தைக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை வி.கே. ஜெயிட்லி இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் முன்னாள் ஆப்கானிய அழகு இராணியாக இருந்தவர். இவரது சகோதரர் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
செலினா லக்னோ உட்பட பல நகரங்களில் வளர்ந்தவர். இவர் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசரி பள்ளியில் படித்தார். அவரது தந்தை பணியாற்றிய ஒரிசாவில் உள்ள பெர்ஹம்புரிலும் கல்வி பயின்றார். இவர் தனது பெரும்பாலான நாட்களை மேற்கு வங்காளத்தின், கொல்கத்தாவில் கழித்தார். இவர் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
2001 ஆம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜெயிட்லி முதலிடத்தைப் பெற்று பெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் 2001 என்ற பட்டத்தை வென்றார். மேலும், இவர் “மிஸ் மார்கோ பிடிபுல் ஸ்கின்”, “இந்தியாடைம்ஸ் சர்பர்ஸ் சாய்ஸ்”, “மோஸ்ட் வான்டட்” விருதுகளையும் வென்றுள்ளார். இவற்றைத் தொடர்ந்து இவர் மிஸ் யூனிவர்ஸ் 2001 போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். அதில் இவர் இறுதிப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றார்.
முதல் முறையாக 2003 ஆம் ஆண்டில் இவர் ஜனஷீன் என்ற படத்தில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டில் ஜெயிட்லி நியூசிலாந்துக்குச் சென்று தனது முதல் அகில உலகப் படமான லவ் ஹாஸ் நோ லாங்க்வேஜ் என்ற காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்தார்.
இந்திய ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவும் ஜெயிட்லி விளங்குகிறார்.
நடித்த திரைப்படங்கள்
2003 | ஜனஷீன் |
---|---|
கேல் | |
2005 | சில்சிலே |
நோ என்ட்ரி | |
சூர்யம் | |
2006 | ஜவானி திவானி : எ யூத்புல் ஜாய் ரைட் |
ஜிந்தா | |
டாம், டிக், அண்ட் ஹாரி | |
அப்னா ஸப்னா மனி மனி | |
2007 | ரெட் : தி டார்க் சைட் |
ஷகலக பூம் பூம் | |
ஹேய் பேபி | |
2008 | சி கொம்பனி |
மனி ஹை தோ ஹனி ஹை | |
கோல்மால் ரிடேர்ன்ஸ் | |
2009 | பேயிங் கெஸ்ட் |
ஆக்சிடென்ட் ஆன் ஹில் ரோட் | |
ஒன் நைட் | |
அனார்கலி | |
2010 | ரன் போலா ரன் |
த குவெஸ்ட் ஆப் ஷேகரேசடே | |
ஹலோ டார்லிங் | |
ஸ்ரீமதி | |
வில் யு மேரி மீ | |
2011 | தேன்க் யு |