நடிகை தீபிகா சாம்சன் | Actress Dipika Kakar

தீபிகா சாம்சன் (Dipika Kakar) ஒரு தொலைக்காட்சி நடிகை. இவர் இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நீர் பாரே தேரே நைநா தேவி எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர், ஜீ டிவியில் ஒளிப்பரப்பான அக்லே ஜானம் மொஹே பிட்டியா ஹி கி ஜோ என்னும் தொடரில் நடித்தார். தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியின் ஸசுரால் சிமர் கா என்ற தொடரில் சிமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.


இளமைக் காலம்


தீபிகா சாம்சனின் தந்தை ஒரு இராணுவ வீரர் ஆவார். இவர் குடும்பத்தின் மூன்றாவது பெண் பிள்ளை ஆவார். தீபிகா சாம்சன் நடிக்க வருவதற்கு முன்னால் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்தார். பின், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பணியை விடுத்து நடிக்க வந்துவிட்டார். இவர் விமான துறையில் பணிபுரியும் தன் காதலரான ரவுணக் சாம்சன் என்பவரை 2009ம் ஆண்டு சனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.


சின்னத்திரை


 • 2010 – நீர் பாரே தேரே நைநா தேவி – லட்சுமி

 • 2010 – அக்லே ஜானம் மொஹே பிட்டியா ஹி கி ஜோ – ரேகா

 • 2011 – மூன்று முடிச்சு – சிமர்

 • மூன்று முடிச்சு


  கலர்ஸ் தொலைக்காட்சியின் சாசுரல் சிமர் கா என்னும் தொடர், தமிழில் மூன்று முடிச்சு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிப்பரப்பப்படுகிறது. தீபிகா சாம்சன் இதில் சீமா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார்.


  வெளி இணைப்புகள்

  நடிகை தீபிகா சாம்சன் – விக்கிப்பீடியா

  Actress Dipika Kakar – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *