நடிகை ஈஷா குப்தா | Actress Esha Gupta

இஷா குப்தா (Esha Gupta) (பிறப்பு 28 நவம்பர் 1985) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் பெமினா மிஸ் இந்தியா 2017 வாகையாளர் ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.


2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஈஷா பங்குபெற்றார். அதில் அவர் மூன்றாவது இடம் பெற்றார். மேலும் மிஸ் இந்தியா சர்வதேச பட்டத்தை வென்றார். அதன் பின்னர் திரைப்பட நடிப்பிற்கான வாய்ப்புகளைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில் ஜனாத் 2 என்ற திரைபடத்தின் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக சிறப்பு அறுமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அரசியல் நாடக படமான சக்ரவியூங் (2012) படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்காக குப்தா புகழ் பெற்றார். ஆனால் நகைச்சுவைத் திரைப்படமான அம்சக்கல்ஸ் (2014) படத்தில் அவரது நடிப்பு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[சான்று தேவை] திகில் திரைப்படம் ராஸ் 3D (2012), சஸ்பென்ஸ் த்ரில்லர் உருஸ்தோம் (2016) மற்றும் திருட்டைப்பற்றிய திரைப்படமான பாத்சாஹோ (2017) ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


ஆரம்ப வாழ்க்கை


ஈஷா குப்தா தில்லியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு நேஹா என்ற சகோதரி உள்ளார்.


தொழில்


2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியாவில் ஈஷா பங்கேற்றார்.


மகேசு பட்டின் திரைப்படமான ஜன்னத் 2 வில் இம்ரான் ஹஷ்மியுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் ₹430 மில்லியன்
(US$5.64 மில்லியன்) சம்பாதித்து வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றது. இப்படவெற்றியின் மூலம் இவர் திரைப்படத்துறையில் பிரபலமடைந்தார்.


வெளி இணைப்புகள்

நடிகை ஈஷா குப்தா – விக்கிப்பீடியா

Actress Esha Gupta – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *