நடிகை பியர்லெஸ் நதியா | Actress Fearless Nadia

மேரி ஆன் இவான்சு (Mary Ann Evans) தனது மேடைப் பெயரான பியர்லெஸ் நதியா (Fearless Nadia) (8 சனவரி 1908 – 9 சனவரி 1996) என்றும் அழைக்கப்பட்ட இவர் இந்திய நடிகையும், ஆத்திரேலிய வம்சாவளியைச் சேர்ந்த சண்டைக் கலைஞருமாவார். இவர் 1935 இல் வெளியான ஹண்டர்வாலி என்றத் திரைப்படத்தில் முகமூடி அணிந்த, துணிச்சலான சாகசக்காரராக நடித்ததற்காக மிகவும் நினைவுகூரப்படுகிறார், இது ஆரம்பகாலத் திரைப்படங்களில் பெண்கள் முன்னணியாக நடித்த இந்தியத் திரைப் படங்களில் ஒன்றாகும். இவர் பெரும்பாலும் கவர்ச்சியின் சின்னமாக குறிப்பிடப்படுகிறார்.


சுயசரிதை


ஆரம்ப கால வாழ்க்கை


நதியா 1908 சனவரி 8 ஆம் தேதி மேற்கு ஆத்திரேலியாவின் பேர்த்தில் மேரி ஆன் இவான்சு என்ற பெயரில் பிரித்தானிய இராணுவத்தில் தன்னார்வலரான ஸ்காட்ஸ்மேன் ஹெர்பர்ட் இவான்சு என்பவருக்கும், அவரது மனைவி மார்கரெட் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஆத்திரேலியாவில் வசித்து வந்தனர். ஹெர்பர்ட்டின் படைப்பிரிவு மும்பைக்கு அனுப்பப்பட்டபோது இவருக்கு ஒரு வயது ஆகியிருந்தது. பின்னர், மேரி தனது தந்தையிடம் ஐந்து வயதில் 1913 இல் மும்பைக்கு வந்து சேர்ந்தார்.


1915 ஆம் ஆண்டில் நடந்த, முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியர்களால் ஏற்பட்ட இவரது தந்தையின் அகால மரணம் குடும்பம் பெசாவருக்கு (இப்போது பாக்கித்தான்) செல்லத் தூண்டியது. இவர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (இப்போது கைபர் பக்துன்வா) தங்கியிருந்தபோது குதிரை சவாரி, வேட்டை, மீன்பிடித்தல் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். பின்னர் மேடம் ஆஸ்ட்ரோவா என்பவரின் கீழ் பாலே நடனத்தைப் பயின்றார்.


முன்னதாக மும்பையிலுள்ள இராணுவ விற்பனையகத்தில் ஒரு விற்பனையாளராக பணியில் சேர முயற்சித்தார். ஒரு கட்டத்தில் ஒரு சிறந்த வேலையைப் பெறுவதற்கு தட்டச்சு கற்க விரும்பினார். ஆஸ்ட்ரோவாவின் குழு பிரித்தானிய வீரர்களுக்காக நிதி திரட்ட இராணுவ தளங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது. அக்குழுவுடன் பயணித்து இவர் தனது திறமைகளை நன்கு வளர்த்துக் கொண்டார். இது திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது கைகொடுத்தது. பின்னர், திரைப்படங்களுக்காக நதியா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.


இவர் ஒரு நாடகக் கலைஞராக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 1930 இல் சார்க்கோ சர்க்கஸில் பணியாற்றத் தொடங்கினார். 1930களில் மும்பையில் சண்டைக் காட்சிகளிலும், அதிரடியிலும் புகழ்பெற்ற திரைப்படங்கள தயாரித்து வந்த வாடியா மூவிட்டோனின் நிறுவனரான ஜே. பி. ஹெச். வாடியா என்பவரால் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1967-68 ஆம் ஆண்டில், அவர் 50 களின் பிற்பகுதியில் இருந்தபோது, கிலாடி ( தி பிளேயர் ) என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் தோன்றினார்.


தனிப்பட்ட வாழ்க்கை


நதியா 1961 இல் ஓமி வாடியாவை மணந்தார்.


இறப்பு


வயது தொடர்பான நோய்களால், தனது 88 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து, 1996 சனவரி 9 அன்று நதியா இறந்தார்.


மரபு


8 சனவரி 2018 அன்று, பியர்லெஸ் நதியாவின் 110 வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் தனது டூடுலில் இவரை காண்பித்தது. டூடுலுக்காக நியமிக்கப்பட்ட மற்றொரு இந்தியக் கலைஞர் தேவகி நியோகி என்பவராவார்.

வெளி இணைப்புகள்

நடிகை பியர்லெஸ் நதியா – விக்கிப்பீடியா

Actress Fearless Nadia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *