காயத்திரி குப்தா (Gayatrhi Gupta) ஒர் இந்திய தெலுங்கு மொழி நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். குப்தா தன்னுடைய முற்போக்கான கொள்கைகளால் மற்றும் தாராளவாத கருத்துகளால் எல்லாராலும் அறியப்பட்டார். இவர் தெலுங்கு செய்தி ஊடகங்களில் நடத்திய விவாதங்கள் அனைவராலும் அறியப்பட்டது. மேலும் சினிமாவிலும் நடிப்பதைப் பற்றி நன்கு அறிந்தவர். இவர் நேர்மையானவர் மற்றும் வெளிப்படையானவர்.
இளமைக் காலம்
குப்தா தெலுங்கானா மாநிலத்தின் சாகர்ரெட்டி மாவட்டத்தில் சோகிபெட் என்னும் ஊரில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஐந்து மகள்களில் இவர் மூத்தவராவார். தன் பொறியியல் படிப்பை நல்கொண்டாவில் முடித்தார்.
வாழ்க்கை
குப்தா தன் சினிமா தொழிலுக்காக ஐதராபாத் சென்றார். 2006 ஆம் ஆண்டு முதல் சக்சி தொலைக்காட்சியில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
சினிமா வாழ்க்கை
பெல்லிகி முந்து என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். குப்த ஐசுகீரிம் 2 மற்றும் பிடா ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் பல்வேறு துறைகளில் பாடகராக, பாடலாசிரியராக, தன்விருப்பநடையில் இயக்குனராகவும் தன் திறமையை வெளிக்காட்டினார். 2017 ஆம் ஆண்டு நின்னு சுத்து உண்ணா என்ற இசை காணொளியை இயக்கினார்.
திரைப்பட வரலாறு
குறும் படங்கள்
சர்ச்சை
தெலுங்கு திரைப்பட இயக்குனர் தன் படங்களில் நடிக்க ஏற்றுக் கொண்ட பின் தன்னை பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், பாலியியல் ஆதாயங்களைக் கேட்டதாகக் கூறியதால் சர்ச்சை எழுந்தது.