நடிகை கல்கி சுப்ரமணியம் | Actress Kalki Subramaniam

கல்கி சுப்ரமணியம் (Kalki Subramaniam) இவர் ஓர் திருநங்கைகள் உரிமைகள் ஆர்வலரும், கலைஞரும், நடிகரும், எழுத்தாளரும், தமிழ்நாட்டின் தொழிலதிருமாவார்.


ஆரம்ப வாழ்க்கை


இவர், தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தார். ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு கல்வியில் முதலிடம் பிடித்த ஒரு பிரகாசமான மாணவி ஆவார். இவர், பத்திரிகையும் வெகுஜன தொடர்பும், அனைத்துலக தொடர்பு ஆகிய இரண்டு பாடங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரது முதுகலைப் படிப்புகளின் போது, இவர் ‘சகோதரி’ என்று அழைக்கப்படும் திருநங்கைகளுக்கான பெண்கள் மாதாந்திர பத்திரிகையினை வெளியிடத் தொடங்கினார். இது இந்தியாவில் திருநங்கைகளுக்காக வெளிவந்த முதல் தமிழ் பத்திரிகை ஆகும்.


தொழில் முயற்சிகள்


2008 ஆம் ஆண்டில், இவர், இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிறுவனமான சகோதரி அறக்கட்டளையை நிறுவினார். 2017 ஆம் ஆண்டில் சுப்ரமணியம் டிரான்ஹார்ட்ஸ் எனற கலைத் திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட திருநங்கை மக்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் வெளிப்படும் கலைப்படைப்புகளைத் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள பயிற்சி பெற்றனர்.


திரைப்பட வாழ்க்கை


2011 இல், இவர், தமிழ் திரைப்படமான நர்த்தகி திரைப்படத்தில் நடித்தார். இது திருநங்கை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது. சர்கார் என்ற 2018 படத்தில் இடம் பெற்ற “ஒரு விரல் புரட்சி” என்ற பாடலில் ஒரு சிறப்பு தோற்றத்தை வெளிப்படுத்தினார். இவர் திரைப் படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்த முதல் திருநங்கையாவார்.


கலை


இவரது கலைப்படைப்புகள் பாப் கலை பாணியாகும். அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனியில் இவரது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார். அவரது கவிதைகளான, குரி அருதீன் (பல்லஸ், ஐ கட்), வாடு (தி ஸ்கார்) என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட கவிதை குறும்படத்தில் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில், இவர் தனது ஓவியங்களுக்கு பொது மக்களிடடையே பிரச்சாரத்தின் மூலம் நிதி திரட்டினார். அதன்மூலம் பெறப்பட்ட தொகையினை பாதிக்கப்பட்ட திருநங்கை பெண்களின் கல்விக்கு உதவினார்.


வெளி இணைப்புகள்

நடிகை கல்கி சுப்ரமணியம் – விக்கிப்பீடியா

Actress Kalki Subramaniam – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *